இவ்வளவு கம்மி விலையில் இப்படி ஒரு போனா? நாளை அறிமுகமாகும் Tecno Spark 8 Pro.. விலை இது தான்..

|

டெக்னோவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன், அதாவது டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் டிசம்பர் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது. இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் MediaTek Helio G85 சிப்செட் மூலம் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏற்கனவே பங்களாதேஷில் இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கும் டெக்னோ நிறுவனம்

இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கும் டெக்னோ நிறுவனம்

டெக்னோ நிறுவனம் சமீபத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மக்களின் கவனத்தை ஈர்க்க துவங்கியுள்ளது. இதற்கான முக்கிய காரணம், நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அட்டகாசமான அம்சங்களுடன் குறைந்த விலையில் வழங்கத் துவங்கியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா முக்கிய நாடக திகழ்கிறது. இதை டெக்னோ நிறுவனம் அறிந்து தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதை நாம் நேரடியாகக் காண்கிறோம்.

புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்

புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்

டெக்னோ நிறுவனம் தனது ட்விட்டர் கைப்பிடி மூலம் புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்துள்ளது. இதன் மூலம், டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 33W சக்தி கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தைக் கொண்டிருக்கும் என்றும், இது ஒரு மணி நேரத்தில் சாதனத்தை 0% முதல் 85% வரை சார்ஜ் செய்ய முடியும் என்றும் டெக்னோ அதன் டிவிட்டர் இடையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. பட்ஜெட் விலையில் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் புது போனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுகம் எப்போது?

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுகம் எப்போது?

அதேபோல், சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 மேக பிக்சல் கொண்ட முதன்மை சென்சார் உடன் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் நாளை (டிசம்பர் 29 ஆம் தேதி) அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபர தகவலை இப்போது பார்க்கலாம்.

Tecno Spark 8 Pro போனின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

Tecno Spark 8 Pro போனின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் ஏற்கனவே பங்களாதேஷ் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதால், விவரக்குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நாம் உறுதியாகக் கணிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது என்பது சிறப்பானது. இந்தியாவில் அறிமுகப்படுத்தும் சாதனத்தில் நிறுவனம் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும் கூட, அறிமுகத்திற்கு முன்னர் நாம் இது தான் உறுதியான தகவல் என்பதை உறுதிப்படக் கூறமுடியாது. இருப்பினும், இந்த அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.

கெத்து காட்டும் BSNL: 425 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்! ரூ.397 விலையில் கூட நீண்டகால திட்டமா?கெத்து காட்டும் BSNL: 425 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்! ரூ.397 விலையில் கூட நீண்டகால திட்டமா?

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான HiOS v7.6 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Tecno Spark 8 Pro ஆனது 6.8' இன்ச் அளவு கொண்ட முழு எச்டி பிளஸ் (FHD+) DoT நாட்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கக்கூடும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஸ்மார்ட்போன் MediaTek Helio G85 சிப்செட் உடன் இணைந்து 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். மைக்கோ எஸ்டி கார்டின் உதவியுடன் பயனர்கள் உள் சேமிப்பகத்தை 256 ஜிபி வரை விரிவாக்குவதற்கான விருப்பமும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ கேமரா

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ கேமரா

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றி பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 48 மெகா பிக்சல் கொண்ட முதன்மை சென்சார் உடன் 2MP சென்சார் மற்றும் AI லென்ஸுடன் இணைக்கப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ சாதனத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக, சாதனம் முன்புறத்தில் 8 மெகா பிக்சல் சென்சாருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? நாசா விஞ்ஞானி கூறிய 'உண்மை' தகவல் என்ன தெரியுமா?செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? நாசா விஞ்ஞானி கூறிய 'உண்மை' தகவல் என்ன தெரியுமா?

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ விலை என்ன?

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ விலை என்ன?

Tecno Spark 8 Pro ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை பற்றிப் பார்க்கையில், இந்த புதிய Tecno Spark 8 Pro ஸ்மார்ட்போனின் விலை பட்ஜெட் விலை பிரிவிற்குள் களமிறங்கும் என்று உறுதிப்பட நம்பப்படுகிறது. காரணம், இதற்கு முன்
டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ வங்காள தேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், அதே அம்சங்களுடன் ஒரே மாதிரியான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷில் அறிமுகம் செய்யப்பட்ட தகவலை வைத்துப் பார்க்கையில், இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ 6GB+64GB மாடல் தோராயமாக ரூ.14,700 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Spark 8 Pro To Launch At Budget Price With MediaTek Helio G85 Chipset On December 29 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X