இந்த நாளில் Tecno Spark 8 Pro வாங்கினால் மட்டுமே விலை ரூ.10,599.. இல்லையெனில் உயர்ந்த விலை தான்..
டெக்னோவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன், அதாவது டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் டிசம்பர் 29 ஆம் தேதி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் MediaTek Helio G85 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏற்கனவே பங்களாதேஷில் இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக வெளிவரும் டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ
டெக்னோ நிறுவனம் சமீபத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மக்களின் கவனத்தை ஈர்க்க துவங்கியுள்ளது. இதற்கான முக்கிய காரணம், நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அட்டகாசமான அம்சங்களுடன் குறைந்த விலையில் வழங்கத் துவங்கியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா முக்கிய நாடக திகழ்கிறது என்பதை டெக்னோ நிறுவனம் அறிந்து, தொடர்ந்து அந்த பாதையில் சிறப்பாகச் செயல்பட்டு முன்னேறி வருவதை நாம் நேரடியாகப் பார்க்க முடிகிறது.

சிறப்பு வெளியீட்டு விலை என்ன?
டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனத்தை விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் ஸ்பெஷல் பிரிவின் கீழ் வரும் டிசம்பர் 29, 2021 ஆம் தேதி தகவலின் படி இந்த இந்த புதிய சாதனத்தைச் சலுகையுடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் சலுகையாக இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ இப்போது வெறும் ரூ. 10,599 என்ற சிறப்பு வெளியீட்டு விலையில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வாங்கக் கூடிய வகையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களை ஈர்க்கும் புதுமைகளை கொண்ட ஸ்மார்ட்போன்
இந்த ஸ்மார்ட்போன் நான்கு துடிப்பான வண்ணங்களில் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கும். இது வின்சர் வயலட், கொமோடோ ஐலேண்ட், டர்க்கைஸ் சியான் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் ஆகிய வண்ணங்களில் வருகிறது. "சமீபத்திய ஸ்பார்க் 8 ப்ரோ, எப்பொழுதும் எல்லாவற்றிலும் சிறந்ததையே விரும்பும் இந்திய இளைஞர்களின் அபிலாஷைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டில் இதுபோன்ற சிறந்த சமீபத்திய அம்சங்கள் உடன் பல ஈர்க்கும் புதுமைகளைக் கொண்டு வர நாங்கள் எதிர்நோக்குகிறோம்." என டிரான்ஸ்ஷன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அரிஜீத் தலபத்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Tecno Spark 8 Pro டிஸ்பிளே அம்சம்
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்ஃபோன் ஒரு பெரிய 6.8" FHD+ சென்டர் டாட்-இன் பெர்ஃபெக்ட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 500 nits' பிரைட்னஸ் உடன் கூடிய 120Hz டச் சாம்லிங் ரேட் அம்சத்துடன் வருகிறது. இதனால் உயர் திறன் கேம்களை விளையாடும் போது திரையில் வேகமான டச் ரெஸ்பான்ஸை பயனர்கள் பெறுவதை நிறுவனம் இதன் வழி உறுதி செய்துள்ளது. இது Helio G85 பிராசஸர் உடன் இயங்குகிறது. Tecno Spark 8 Pro கேமிங் பயனர்களுக்குச் சிறப்பான பயனை வழங்க 2GHz ஆக்டா-கோர் ஆர்ம் கார்டெக்ஸ் A75 CPU மற்றும் 1GHz மாலி G52 GPU உடன் வருகிறது.

48MP உயர் தெளிவுத்திறன் கொண்ட AI கேமரா
எந்த ஒளியிலும் சிறந்த படங்களைக் கிளிக் செய்ய அல்ட்ரா சென்சிங் டெட்ராசெல் தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP உயர் தெளிவுத்திறன் கொண்ட AI கேமரா மற்றும் சூப்பர் நைட் ஷாட் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இது 2K டைம் லேப்ஸ், ஸ்லோ மோஷன், வீடியோ பொக்கே, வீடியோ பியூட்டி இன்டெலிஜென்ட் ஃபோகஸ், ஏஐ பியூட்டி போன்ற பல்வேறு ப்ரோ புகைப்பட முறைகளை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் ரூ. 10, 000 விலைக்குள் இப்படி அம்சங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போனை வாங்காமல் இருக்க முடியாது தானே.

மெகா 5000 mAh 33w பாஸ்ட் சார்ஜிங் அம்சம்
டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஒரு மெகா 5000 mAh பேட்டரியைக் 33w பாஸ்ட் சார்ஜிங் உடன் கொண்டுள்ளது. இது 4GB LPDDR4x ரேம் மற்றும் 64 GB ROM மூலம் உதவுகிறது. இந்த சாதனமானது மெய்நிகர் நினைவக விரிவாக்கத்தை 3 ஜிபி வரை 7 ஜிபி வரை உருவாக்குகிறது. இதில் ரேம் நினைவகம் போதுமானதாக இல்லை என்றால் OS ஆனது உள் சேமிப்பகத்திலிருந்து (ROM) இயற்பியல் நினைவகத்திற்கு (RAM) தரவை மாற்ற முடியும். இதில் பிரத்தியேக SD கார்டு ஸ்லாட் மூலம் உள் சேமிப்பகத்தை 512 GB வரை நீட்டிக்கக் கூடிய அம்சமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 4 ஆம் தேதி ரெடியா இருங்க
இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ IPX2 ரேட்டிங் ஸ்பிளாஸ்-ரெசிஸ்டண்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ஜனவரி 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வரும். இந்த சாதனம் ஒற்றை சேமிப்பக உள்ளமைவில் வருகிறது. இதன் விலை ரூ.10,599 ஆக ஆரம்பத்தில் விற்பனை செய்யப்படும். அமேசான் பட்டியல் இது ஒரு சிறப்பு வெளியீட்டு விலை என்றும், முதல் விற்பனைக்குப் பிறகு சில நாட்களில் விலை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கிறது. Spark 8 Pro ஆனது கொமோடோ பீச், டர்க்கைஸ் சியான், வின்சர் வயலட் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications