ஆர்டர் மேல் ஆர்டர் குவியுது.. ரூ.10000 பட்ஜெட்ல பக்காவான போன்.. 8GB RAM + 1TB மெமரி.. SONY கேமரா.. எந்த மாடல்?
ரூ. 10,000 பட்ஜெட்ல ஒரு சூப்பரான ஸ்மார்ட்போனை வாங்க ஆசை படுகிறீர்களா? அப்படியானால், நேற்றைய தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது படு வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் புதிய டெக்னோ ஸ்பார்க் 30C (Tecno Spark 30C) போனை தான் நீங்கள் வாங்க வேண்டும். வெறும் 10,000 ரூபாய் விலையில் இப்படிப்பட்ட அம்சங்களை ஒரே போனில் எதிர்பார்க்கமுடியுமா என்று நம்மை வியக்க வைக்கும் வகையில், இதன் அம்சங்கள் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பம்சம், சலுகை விபரம் மற்றும் முழு விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி (Tecno Spark 30C 5G) சாதனம் 6.67' இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 720 x 1,600 பிக்சல் கொண்ட டிஸ்பிளேவாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவின் மைய பகுதியில் பன்ச் ஹோல் டிசைன் வடிவமைப்பை கொண்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி (Tecno Spark 30C 5G):
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 4GB ரேம் (RAM) முதல் துவங்கி 8GB ரேம் வரையிலான மாடல்களை வழங்குகிறது. இதில் 4GB விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வசதியும் உள்ளது. இதன் ஸ்டோரேஜ் (Storage) 64GB மற்றும் 128GB ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வருகிறது. மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு வழியாக இந்த சாதனம் 1TB வரையிலான மெமரியை (Memory) ஆதரிக்கிறது.
புதிய டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி (Tecno Spark 30C 5G) போனில் 2.4GHz ஆக்டா கோர் மீடியாடெக் D6300 (Mediatek D6300) சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் டெக்னோ நிறுவனம் 48MP கொண்ட சோனி (SONY IMX582) சென்சார் பொருந்திய AI கேமராவுடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் இந்த போன் 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இதில் FM ரேடியோ அம்சமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இதில் நாஸ்டாலிஜிக் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்பிரிண்ட் சென்சார் (Fingerprint Sensor) போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த புதிய Tecno Spark 30C 5G போன் 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இது 2G, 3G, 4G, 5G ஆகிய நெட்வொர்க்கில் சிறப்பாக இயங்குகிறது.
இது IP54 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் ஆதரவை கொண்டுள்ளது. இந்த போன் தற்போது அரோரா கிளவுட் (Aurora Cloud), அசுர் ஸ்கை (Azure Sky) மற்றும் மிட்நைட் ஷேடோ (Midnight Shadow) ஆகிய மூன்று நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய Tecno Spark 30C 5G ஸ்மார்ட்போன் ரூ. 12,999 என்ற அசல் விலையுடன் விற்பனை வந்துள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி விலை (Tecno Spark 30C 5G Price):
நேற்று தான் அறிமுகம் செய்யப்பட்டது என்பதனால், முதல் நாளான நேற்று இந்த போன் ஆரம்பகால சிறப்பு தள்ளுபடியுடன் ரூ. 8,999 என்று விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரண்டாம் நாளான இன்று இந்த புதிய Tecno Spark 30C 5G சாதனம் ரூ. 10,499 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆரம்ப கால சிறப்பு சலுகை முடிவடையும் முன், இந்த போனை வாங்கிக்கொள்வது சிக்கனமானது.


Click it and Unblock the Notifications








