Home
News

மிரளுது மார்க்கெட்.. பட்ஜெட் விலை.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. என்ன மாடல்?

டெக்னோ (Tecno) நிறுவனம், அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் (Tecco Spark 20 Pro+) என்ற பெயருடன் வெளிவரவிருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் சாதனத்தை நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. அதற்கு பின், இந்த மாத துவக்கத்தில் டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 20 (Tecno Spark 20) மற்றும் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ (Tecno Spark 20 Pro) போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது.

மிரளுது மார்க்கெட்.. பட்ஜெட் விலை.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே..

இந்த சீரிஸ் வரிசையில் மற்றொரு புதிய சேர்ப்பாக டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் (Tecno Spark 20 Pro+) சேரப்போகிறது. இந்த ஸ்மார்ட்போன் தான் டெக்னோ ஸ்பார்க் வரிசையில் ஹை-எண்டு ஸ்மார்ட்போனாக வெளி வரப்போகிறது. தற்போது இந்த சாதனம் டெக்னோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் (Tecno Spark 20 Pro+) சாதனத்தின் முழு விபரம் மற்றும் சிறப்பம்ச விபரங்களை எதுவும் குறிப்பிடப்படாமல் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற தளங்களின் வழியாக நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் (Tecno Spark 20 Pro+) 6.78" இன்ச் 1080 x 2436 பிக்சல் கொண்ட FHD+ AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது 1000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் 2160Hz PWM டிம்மிங் அம்சத்துடன் வருகிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்டிமேட்ட (MediaTek Helio G99 Ultimate) சிப்செட் உடன் வருகிறது.

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் (Tecno Spark 20 Pro+) கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 108MP பிரைமரி கேமரா உடன் வருகிறது. இது முன்பக்கத்தில் 32MP செல்பி ஸ்னாப்பர் உடன் டூயல் LED பிளாஷ் உடன் வருகிறது. டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் (Tecno Spark 20 Pro+) ஸ்மார்ட்போன் சாதனம் 5000 mAh பேட்டரி உடன் வருகிறது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் (Tecno Spark 20 Pro+) சாதனம் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்துடன் இயங்குகிறது. இது டெம்போரல் ஆர்பிட்ஸ் (Temporal Orbits), லூனார் பிரோஸ்ட் (Lunar Frost), ரேடியன்ட் ஸ்டார்ஸ்ட்ரீம் (Radiant Starstream) மற்றும் மேஜிக் ஸ்கின் 2.0 க்ரீன் (Magic Skin 2.0 Green) நிறங்களில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tecno Spark 20 Pro+ விலை பற்றிய தகவல்களை டெக்னோ அதன் தளத்தில் பதிவிடவில்லை. ஆனால், சமீபத்தில் லீக் ஆன தகவலின் படி பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் விலை பிரிவில் ரூ.18,000 - ரூ.20,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 20 Pro+ Officially Spotted On Company Site Check Specifications and Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X