கம்மி விலையில இப்படி ஒரு Mobile-ஆ? யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சம்பவம்-ஆ?
Xiaomi, Redmi, Realme பிராண்டுகளுடன் நேரடி போட்டியில் களமிறங்க Tecno நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனம் டெக்னோவின் ஸ்பார்க் சீரிஸ் வரிசையில், Tecno Spark 10C மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெக்னோ அதன் ஸ்பார்க் 10 சீரிஸ் வரிசையில் பல சாதனங்களை படிப்படியாக வெளியிடுவதாக முன்பு அறிவித்தது. அந்த வரிசையை உள்ளடக்கிய நான்கு மாடல்களில், டெக்னோ ஸ்பார்க் 10C சாதனமும் ஒன்று என்பதனால், இந்த டிவைஸை நிறுவனம் இப்போது ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில், டெக்னோ ஏற்கனவே Tecno Spark 10 Pro மற்றும் Tecno Spark 10 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

அதேபோல், Tecno Spark 10C மாடலையும் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதன மெட்டா பிளாக், மெட்டா ப்ளூ மற்றும் மெட்டா கிரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரே 4ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலுடம் மட்டுமே வருகிறது. இதன் விலை ஆப்பிரிக்காவில் $170 ஆகும்.
இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 13,900 விலையை நெருங்கும். டெக்னோ ஸ்பார்க் 10C வரும் வாரங்களில் இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டெக்னோ ஆப்ரிக்காவிற்கு வெளியே ஸ்மார்ட்போனின் கிடைக்கும் விவரங்களை பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. இந்த புதிய Tecno Spark 10C ஆனது 6.6' இன்ச் HD+ கொண்ட 720 x 1612 பிக்சல்கள் உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட் போன் சாதனம் டாட் நாட்ச் டிஸ்ப்ளேவாக வருகிறது. இது 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் Unisoc T606 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்தியாவில், இது வேற சிப்செட்டை பெற வாய்ப்புள்ளது. இந்த சாதனத்தில் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இது விரிவாக்கக்கூடிய மற்றும் கூடுதல் விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன் வருகிறது.
இது 4ஜிபி ரேம் வரை கொண்டுள்ளது. அதேபோல், கேமரா அம்சங்களை பொறுத்த வரை, இந்த Tecno Spark 10C டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 16 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் டூயல் LED ஃபிளாஷ் உடன் குறிப்பிடப்படாத மற்றொரு சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் மற்றும் ஃபிளாஷ் உடன் வருகிறது.
இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, ப்ளூடூத், FM ரேடியோ, GPS/ A-GPS, NFC மற்றும் USB-C போர்ட் ஆகியவை அடங்கும். இந்த சாதனம் 5000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 18W வேகமான வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த சாதனம் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையிலான HiOS 8.6 இல் இயங்குகிறது. இது ரூ.13,000 - ரூ.15,000 பிரிவில் போட்டியிடுகிறது.


Click it and Unblock the Notifications








