யார் சாமி நீ! ரூ.15,000 விலைக்குள்ள இத்தனை போனை இறக்கிவிடுற? அதுவும் ப்ரோ மாடலே 10,990 தானா?
இந்தியாவில் ரூ.15,000 விலைக்குள் விற்பனையாகும் மொபைல்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதை அறிந்த நிறுவனங்கள், குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை கொணட ஸ்மார்ட்போன் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வரிசையில் Tecno நிறுவனம் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை வெகு விரைவில் துவங்கவுள்ளது. இந்த சாதனமும் பிரபலமான ரூ.15,000 விலை புள்ளியின் கீழ் வெளிவரும் என்று கூறப்படுகிறது. டெக்னோ செவ்வாயன்று இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 10 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் மொத்தம் 4 சாதனங்கள் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.

இதில் Tecno Spark 10 5G, Tecno Spark 10 Pro, Tecno Spark 10C மற்றும் vanilla Tecno Spark 10 ஆகிவை அடங்கும். புதிய வரிசையானது ரூ 15,000 துணை பிரிவில் 16GB RAM வரை கொண்ட மாடலாக அறிமுகப்படுத்தப்படும். இந்தத் தொடரில் அறிமுகமாகும் முதல் தயாரிப்பு டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ என்றும், இது மார்ச் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
ட்விட்டரில் நிறுவனம் பகிர்ந்துகொண்ட டீஸர் படம் Tecno Spark 10 Pro சிறப்பம்சம் மற்றும் வடிவமைப்பின் சில தகவல்களை நமக்கு தெரியப்படுத்தியுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 10 சீரிஸ் டீஸர் படம் பிளாக், ப்ளூ, மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் மொபைல்கள் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறது. டெக்னோ ஸ்பார்க் 10 சீரிஸ் பின்புறத்தில் ஒரு பெரிய சதுர கேமரா ஐலேண்டை கொண்டுள்ளது.
இதில் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. மூன்று மாடல்களிலும் இரட்டை கேமரா லென்ஸ்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. ப்ரோ அல்லாத மாடல்களில் இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் இருக்கும் மூன்று ரிங் வடிவங்களைப் புகைப்படம் காட்டுகிறது. இதில் 16MP AI கேமரா உள்ளது என்ற டெக்ஸ்ட்டை நம்மால் பார்க்க முடிந்தது.
மறுபுறம், ப்ரோ மாடலில் இரட்டை கேமராக்கள் இரண்டு தனித்தனி வளையங்களில் வைக்கப்பட்டுள்ளன, ஒரு LED ஃபிளாஷ் லைட்டும் வைக்கப்பட்டுள்ளது. இதில் 50MP AI கேமரா இருக்கும் என்பதை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து மாடல்களும் வட்டமான விளிம்புகளுடன் பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டுள்ளன. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் வலது விளிம்பில் உள்ளன.
டீஸர் படம் Tecno Spark 10 Pro இன் சில முக்கிய விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த போன் MediaTek Dimensity 6020 சிப்செட் உடன் 5G ஆதரவை கொண்டுள்ளது. இது 16GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வரும். இது விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத தொடக்கத்தில் Tecno Spark 10 Pro ஏற்கனவே அறிமுகமானதால், இதன் சிறப்பம்ச விபரங்களை நாம் அறிவோம்.
Tecno Spark 10 Pro சாதனம் 6.8' இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே 2,460 x 1,080 பிக்சல்கள் தீர்மானத்துடன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் MediaTek Helio G88 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tecno Spark 10 Pro டிவைஸ் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. பட்ஜெட் விலையில் பெஸ்ட் மாடலாக இது வெறும் ரூ.10,990 விலையில் வலம் வரப்போகிறது.


Click it and Unblock the Notifications








