Home
News

ஸ்டைலா நச்சுனு கம்மி காசுக்கு புது போன் வேணுமா? அப்போ இதான் பெஸ்ட் மாடல்.. 10 ஆயிரம் போதும்..

ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதும் புதுமைக்கு அதிக வரவேற்பு உண்டு. அதுவும் புதுமையை குறைந்த விலையில் கண்கவர் விருப்பத்துடன் வழங்கினால், மக்கள் அதன் மீது படையெடுக்காமல் இருக்கவே மாட்டார்கள். இந்த யுக்தியை அறிந்த டெக்னோ (Tecno) நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

டெக்னோ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில், புதிதாக டெக்னோ போவ 5 ப்ரோ (Tecno Pova 5 Pro) ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியது. மேலும் இதை இந்தியா உட்பட மற்ற உலக சந்தைகளிலும் அறிமுகம் செய்ய உள்ளதாக நிறுவனம் கூறியிருந்தது. கூடுதலாக, பிராண்ட் இந்தியாவில் அதன் தற்போதைய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு புதிய வண்ண விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டைலா நச்சுனு கம்மி காசுக்கு புது போன் வேணுமா? அப்போ இதான் பெஸ்ட்!

அதாவது, இந்தியாவில் ஏற்கவே அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் போன் மாடலான டெக்னோ ஸ்பார்க் 10 (Tecno Spark 10) மற்றும் டெக்னோ ஸ்பார்க் 10சி (Tecno Spark 10C) மாடல்களை நிறுவனம் இப்போது புதிய கண்கவர் நிறத்துடன் அறிமுகம் செய்துள்ளது. டெக்னோ ஸ்பார்க் 10 இப்போது மெஜந்தா நிற வேரியண்ட் மாடலாக வாங்க கிடைக்கிறது.

அதே நேரத்தில் டெக்னோ ஸ்பார்க் 10சி ஸ்மார்ட் போன் மாடலை நிறுவனம் இப்போது ஆரஞ்சு நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு புதிய வண்ண விருப்பங்களும் கண்ணைக் கவரும் மற்றும் ஸ்மார்ட்போனின் தோற்றத்திற்கு புதிய அழகை சேர்ந்துள்ளன. இதனால், மக்கள் இந்த புதிய நிற போன்களை அதிகம் விரும்பி வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tecno Spark 10 ஸ்மார்ட் போனின் அம்சங்கள் பற்றி பேசுகையில், இது 6.6' இன்ச் HD+ கொண்ட LCD டிஸ்ப்ளேவுடன் மென்மையான 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தைக் கொண்டுள்ளது. இது சக்தி வாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி37 (MediaTek Helio G37) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ஸ்டைலா நச்சுனு கம்மி காசுக்கு புது போன் வேணுமா? அப்போ இதான் பெஸ்ட்!

இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான HiOS 12 இல் இயங்கும் ஸ்மார்ட்போன் சாதனமாகும். இது பெரிய 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கேமரா அம்சத்தை பற்றி பார்க்கையில், இது 50MP பிரைமரி கேமரா மற்றும் செகண்டரி லென்ஸுடன்
இயங்கும் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் செல்ஃபிக்களுக்கான 8MP முன்பக்க கேமராவும் இதில் உள்ளது. இந்த சாதனம் ரூ.10,910 விலையில் வாங்க கிடைக்கிறது.

Tecno Spark 10C ஆனது 6.6' இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது யுனிஸாக் T606 (Unisoc T606) சிப்செட் உடன் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OS இல் இயங்குகிறது.

டெக்னோ ஸ்பார்க் 10 போலவே, இதுவும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட் போன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 16MP பிரைமரி கேமரா மற்றும் மேக்ரோ லென்ஸ் மற்றும் செல்ஃபிக்களுக்கான 8MP முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.10,199 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 10 and Tecno Spark 10C Mobile Under Rs 10000 Gets New Magenta and Orange Colour Variant
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X