ரொம்ப கம்மி விலை: 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி உடன் Tecno 5G ஸ்மார்ட்போன்..

|

Tecno Pova Neo 5G ஸ்மார்ட்போன் ஆனது 6,000mAh பேட்டரி, MediaTek Dimensity 810 SoC ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் மற்றும் மிட் ரேன்ஜ் விலைப்பிரிவு ஸ்மார்ட்போனுக்கு புகழ் பெற்ற டெக்னோ பெரிய டிஸ்ப்ளே உடன் மற்றொரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால் 5ஜி ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது.

5ஜி ஆதரவுடன் கூடிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்..

5ஜி ஆதரவுடன் கூடிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்..

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் 5ஜி ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆம் அதாவது இந்த ஸ்மார்ட்போனானது 6.9 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி ப்ராசசர் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

விலை, விற்பனை தேதி, சிறப்பம்சங்கள்..

இந்த ஸ்மார்ட்போனானது 6,000mAh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.15,000 விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இதன் விலை, விற்பனை தேதி, சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Tecno Pova Neo 5G விலை, விற்பனை தேதி

Tecno Pova Neo 5G விலை, விற்பனை தேதி

Tecno Pova Neo 5G ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற ஒரே வேரியண்ட்டில் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த மாறுபாட்டின் இந்திய விலை ரூ.15,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் டெக்னோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் இந்தியா மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது.

டெக்னோ போவா நியோ 5ஜி சிறப்பம்சங்கள்

டெக்னோ போவா நியோ 5ஜி சிறப்பம்சங்கள்

டெக்னோ போவா நியோ 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் பெரிய டிஸ்ப்ளே இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது MediaTek Dimensity 810 SoC மூலம் இயக்கப்படுகிறது. கேமரா அம்சங்களும் மேம்பட்டதாகவே இருக்கிறது. இதில் பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் ஆதரவு..

மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் ஆதரவு..

Tecno Pova Neo 5G ஆனது FHD+ தீர்மானம் மற்றும் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய பெரிய 6.9-இன்ச் LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது.

50MP ப்ரைமரி ஷூட்டர் ஆதரவு..

50MP ப்ரைமரி ஷூட்டர் ஆதரவு..

Tecno Pova Neo 5G ஆனது 50MP ப்ரைமரி ஷூட்டர் மற்றும் குவாட்-எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய AI லென்ஸ் என்ற டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டெக்னோ போவா நியோ 5ஜி ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர் ஆதரவு

கைரேகை ஸ்கேனர் ஆதரவு

இதில் 6,000எம்ஏஎச் பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. டூயல் சிம் ஆதரவு, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது.

விரைவில் மற்றொரு ஸ்மார்ட்போன்..

விரைவில் மற்றொரு ஸ்மார்ட்போன்..

டெக்னோ சமீபத்தில் இந்தியாவில் டெக்னோ பாப் 6 ப்ரோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து நிறுவனம் கடந்த வாரம் ட்வீட் செய்திருந்தது. அதில் டெக்னோ பாப் 6 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று டெக்னோ அறிவித்தது.

அமேசானில் இதற்கு என லேண்டிங் பக்கமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே விரைவில் இந்த ஸ்மார்ட்போனும் அறிமுகமாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Tecno Pova Neo 5G Smartphone Launched in India at Budget Price with 6000mAh Battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X