மற்ற போன்லாம் Off ஆகிடும்.. ஆனா Tecno Pova Neo 2 மட்டும் சும்மா நின்னு பேசும்.! ஏன் தெரியுமா?

|

Tecno நிறுவனம் சமீபத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Tecno Pova Neo 5G என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இப்போது, ​​இந்த பிராண்ட் Pova சீரிஸ் வரிசையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போன் மாடலைச் சேர்த்துள்ளது. இது டெக்னோ போவா நியோ 2 (Tecno Pova Neo 2) என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அதன் உலகளாவிய அறிமுகத்தை அறிவித்துள்ளது. வெகு விரைவில் இது இந்தியச் சந்தையிலும் களமிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Tecno Pova Neo 2 ஏன் ஸ்பெஷல்? அப்படி என்ன இருக்கிறது இந்த போனில்?

Tecno Pova Neo 2 ஏன் ஸ்பெஷல்? அப்படி என்ன இருக்கிறது இந்த போனில்?

Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சம் என்றால், இது 7,000mAh கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது. இது மீடியா டெக் ஹீலியோ G85 சிப்செட் உடன் வருகிறது. புதிய Tecno Pova Neo 2 சாதனம் 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேவுடன், டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது. இது 6ஜிபி வரை ரேம் உடன் வருகிறது. Tecno Pova Neo 2 போனின் விலை, மற்றும் முக்கியமான விபரங்களைப் பார்க்கலாம்.

Tecno Pova Neo 2 விலை என்ன?

Tecno Pova Neo 2 விலை என்ன?

Tecno Pova Neo 2 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வருகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 17,000 ஆகும். அதேபோல், இந்த Tecno Pova Neo 2 சாதனத்தின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலிலும் வருகிறது. இதன் இந்திய மதிப்பு விலை தோராயமாக ரூ. 20,000 மட்டுமே. அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ரஷ்யாவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இந்திய அறிமுகம் அக்டோபரில் நடைபெறும்.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

Tecno Pova Neo 2 சிறப்பம்சம்

Tecno Pova Neo 2 சிறப்பம்சம்

Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய பஞ்ச் ஹோல் நாட்ச் உடன் இயங்கும் 6.82' இன்ச் முழு HD+ டிஸ்பிளே பேனலைக் கொண்டுள்ளது. Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது ஆக்டா-கோர் சிபியுவுடன் வருகிறது. சிப் ஆன் சிஸ்டம் அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட Mali G52 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் உடன் 128ஜிபி ஸ்டோரேஜ் வரை ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

மிகப் பெரிய 7000mAh பேட்டரி

மிகப் பெரிய 7000mAh பேட்டரி

இந்த புதிய போவா சீரிஸ் ஸ்மார்ட்போனில் 16MP பிரைமரி சென்சார், டெப்த் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் போன்றவை இடம்பெறுகிறது. இது டூயல் ரியர் கேமரா கேமரா அமைப்புடன் வருகிறது. வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கு இது 8MP முன்பக்க செல்பி ஸ்னாப்பரை கொண்டுள்ளது. Tecno Pova Neo 2 மிகப் பெரிய 7000mAh பேட்டரியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது Type-C போர்ட் வழியாக 18W பாஸ்ட் சார்ஜ் ஆதரவை ஆதரிக்கிறது.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

Tecno Pova Neo 2 டால்பி அட்மாஸ் உடன் அறிமுகமா?

Tecno Pova Neo 2 டால்பி அட்மாஸ் உடன் அறிமுகமா?

Tecno Pova Neo 2 பிளாக், கிரேய் மற்றும் ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இது டால்பி அட்மோஸுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட HiOS 8.6 உடன் இயங்குகிறது.

மற்ற போன்களுடன் ஒப்பிடுகையில் இந்த போன் மட்டுமே ஏன் பெஸ்ட்?

மற்ற போன்களுடன் ஒப்பிடுகையில் இந்த போன் மட்டுமே ஏன் பெஸ்ட்?

பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரி உடன் நீண்ட நேர பயன்பாட்டை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். காரணம், இது 7000mah பேட்டரி உடன் வருகிறது. இந்தியச் சந்தையில் தற்போது கிடைக்கும் 5000mah பேட்டரி ஸ்மார்ட்போனின் ஆயுளை விட இது கூடுதலாக இருப்பதனால், கட்டாயம் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இது மிகவும் பிடித்தமான ஸ்மார்ட்போன் மாடலாக மாறப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. அடிக்கடி சார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு Tecno Pova Neo 2 ஒரு வரப்பிரசாதம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Tecno Pova Neo 2 With Massive 7000mAh Battery Announced Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X