அம்மாடியோவ்.! 7000mah பேட்டரி உடன் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? சும்மா நின்னு பேசும் போலயே.!

|

ஒரு புது ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க வேண்டும் என்றால் உங்களுடைய எதிர்பார்ப்பு ஏதுவாக இருக்கும்? புது போனில் என்ன முக்கியமான அம்சங்களை எல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? சிலர் சிறந்த சிப்செட்டை எதிர்பார்ப்பார்கள், சிலர் சிறந்த கேமராவை எதிர்பார்ப்பார்கள், இன்னும் சிலர் மட்டுமே பெரிய சைஸ் பேட்டரியை எதிர்பார்ப்பார்கள். அப்படி, பெரிய சைஸ் பேட்டரியை எதிர்பார்க்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த Tecno Pova Neo 2 நிச்சயம் உங்களுக்கானது தான்.

புதிய சாதனம் 7000mah பேட்டரி உடன் வெளிவருமா?

புதிய சாதனம் 7000mah பேட்டரி உடன் வெளிவருமா?

ஆம், ஏனெனில் இந்த புதிய Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் 7000mah பேட்டரி உடன் அறிமுகமாகவிருக்கிறது. சந்தேகப்படாதீர்கள், சரியாகத் தான் படித்தீர்கள். இந்த புதிய சாதனம் 7000mah கொண்ட பேட்டரி உடன் இந்தியாவில் விரைவில் அறிமுக செய்யப்படவுள்ளது. உண்மையை சொல்ல போனால், ஸ்மார்ட்போன் யூஸர்ஸ்களுக்கு நிலையான பேட்டரி ஆயுள் இல்லை என்றால், புது போன் வங்கியும் பயன் இல்லை என்பதே உண்மை.

ஒரு ஸ்மார்ட்போனிற்கு பேட்டரி எவ்வளவு முக்கியம்?

ஒரு ஸ்மார்ட்போனிற்கு பேட்டரி எவ்வளவு முக்கியம்?

சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தைத் தடையின்றி பெற வேண்டும் என்றால், அதற்கு நிலையான பேட்டரி ஆயுள் தேவைப்படுகிறது. இதை இந்த புதிய Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் நிறைவேற்றுகிறது. Tecno விரைவில் இந்தியா உட்பட உலகளவில் புதிய Tecno Pova Neo 2 4G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இன்னும் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், சமீபத்திய கசிவுகளின் படி இது விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போனின் இன்னும் சில சிறப்பம்ச விபரங்கள் சமீபத்தில் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி (@passionategeekz) என்பவரிடமிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

Tecno Pova Neo 2 பற்றி வெளியான லீக் தகவல்கள் என்ன சொல்கிறது?

Tecno Pova Neo 2 பற்றி வெளியான லீக் தகவல்கள் என்ன சொல்கிறது?

இவர் வெளியிட்ட டிவிட்டர் தகவலின் படி, Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் சைபர் ப்ளூ மற்றும் யுரேனோலித் கிரே வண்ண விருப்பங்களில் இந்தியாவில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் ஆகிய இரண்டு விருப்பங்களில் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் டிரிம்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

Tecno Pova Neo 2 போனின் டிஸ்பிளே மற்றும் கேமரா அம்சம்

Tecno Pova Neo 2 போனின் டிஸ்பிளே மற்றும் கேமரா அம்சம்

Tecno Pova Neo 2 ஸ்மார்ட்போன் 6.82' இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டிருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் வரலாம். இது 16 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மூலம் டூயல் ரியர் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சாருடன் வரலாம். டெக்னோ நிலையான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,000mAh பேட்டரியுடன் இதன் பேக் செய்துள்ளது.

Tecno Pova Neo விலை என்ன?

Tecno Pova Neo விலை என்ன?

இது தவிர, Tecno Pova Neo 2 அறிமுகப்படுத்தப்படும் விலை வரம்பு அல்லது வெளியீட்டுக் காலவரிசை பற்றி லீக் தகவல் எதையும் குறிப்பிடவில்லை என்பதனால் நாம் இன்னும் எவ்வளவு நாள் இந்த சாதனத்திற்காகக் காத்திருக்க வேண்டும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது வெளிவரும் போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னோ போவா நியோவின் வாரிசாக இந்த Tecno Pova Neo 2 வெளிவரும். இந்த Tecno Pova Neo ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 ஆகும்.

Best Mobiles in India

English summary
Tecno Pova Neo 2 may launch in India Soon with a 7000mAh battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X