Home
News

இருந்தாலும் விலை ரொம்ப கம்மி: டெக்னோ போவா ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 அறிமுகம்!

டெக்னோ போவா பட்ஜெட் கேமிங் போன் டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

டெக்னோ போவா ஸ்மார்ட்போன்

டெக்னோ போவா ஸ்மார்ட்போன்

டெக்னோ போவா நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக பட்ஜெட் கேமிங் ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே பல சந்தைகளில் கிடைக்கிறது. தற்போது இந்திய சந்தையில் கேமிங் பிரியர்களுக்கு என அறிமுகம் செய்ய உள்ளது. பிளிப்கார்ட் மைக்ரோசைட் விவரங்களின்படி, டெக்னோ போவா ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம்

டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம்

டெக்னோ போவா ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனவும் இதன் விலை சுமார் ரூ.10,000 என்ற விலையில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிலிப்பைன்ஸ் விலையானது இந்திய மதிப்பில் ரூ.10,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெக்னோ போவா ஸ்மார்ட்போன் மேஜிக் ப்ளூ, ஸ்பீட் பர்பில் மற்றும் டோசில் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

மீடியா டெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்

மீடியா டெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்

டெக்னோ போவா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் பெரிய பேட்டரி இருக்கிறது. கேமிங் அம்ச செயலி பொருத்தப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் 3டி மல்டி லேயர் கிராஃபைட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு

டெக்னோ போவா ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் எச்டி ப்ளஸ் டாட் இன் டிஸ்ப்ளே, 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் பஞ்ச் ஹோல் வசதியுடன் 8 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. இதன்மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யமுடியும். இதில் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது.

13 எம்பி பிரதான கேமரா

13 எம்பி பிரதான கேமரா

ஆண்ட்ராய்டு 10 ஆதரவின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் வேக சார்ஜிங் அம்சம் இருக்கிறது. டெக்னோ போவா குவாட் கேமரா அமைப்பில் 13 எம்பி பிரதான கேமராவும், 2 எம்பி இரண்டாம் நிலை கேமராவும், 2 எம்பி மூன்றாம் நிலை கேமராவும் இருக்கிறது. இரட்டை 4ஜி வோல்ட், யூஎஸ்பி டைப்சி போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இவற்றில் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Tecno Pova Gaming Smartphone May Launching on December 4 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X