Home
News

வெறித்தனமான போன்.. பட்ஜெட் விலை.. 2TB வரை ஸ்டோரேஜ்.. குவாட் LED டூயல் கேமரா.. எந்த மாடல் தெரியுமா?

டெக்னோ (Tecno) நிறுவனம் மிக விரைவில் பட்ஜெட் பிரியர்களை கவரும் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் சாதனத்தை வெளியிடவுள்ளது. இது டெக்னோ போவா 6 ப்ரோ (Tecno Pova 6 Pro) என்ற பெயருடன் வெளிவரவுள்ளது. இது பற்றிய கூடுதல் தகவல் இதோ.

இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (Mobile World Congress - MWC) 2024 நிகழ்வில் பல புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளை அறிமுகம் செய்யவிருப்பதாக Tecno நிறுவனம் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இதில், இந்த பிராண்டின் அடுத்த புதுவரவு ஸ்மார்ட்போன் மாடலாக டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி அறிமுகமாகவிருக்கிறது.

வெறித்தனமான போன்.. பட்ஜெட் விலை.. 2TB வரை ஸ்டோரேஜ்..

இத்துடன் டெக்னோ மெகாபுக் டி16 ப்ரோ 2024 அல்ட்ரா நோட்புக் சாதனத்தையும் நிறுவனம் MWC 2024 இல் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனங்களின் அறிமுகத்திற்கு முன்பாக, ஒரு சமீபத்திய புதிய லீக் தகவல், Tecno Pova 6 Pro ஸ்மார்ட்ஃபோன் சாதனம் தாய்லாந்தில் உள்ள NBTC சான்றிதழிளில் ஒப்புதல் பெரும் பட்டியலில் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியானால், டெக்னோ போவா 6 ப்ரோ சாதனம் விரைவில் தாய்லாந்து சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த தளத்தில் புதிய டெக்னோ போவா 6 ப்ரோ சாதனம் LI9 என்ற மாடல் எண்ணுடன் கூடிய Tecno பிராண்ட் லோகோவுடன் NBTC தளத்தில் காணப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே கன்சோல் மற்றும் புளூடூத் SIG சான்றிதழின் தரவுத்தளங்களில் கூட புதிய டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி காணப்பட்டது.

ஆனால், இந்த தளங்களில் டெக்னோ போவா 6 ப்ரோ (Tecno Pova 6 Pro) சாதனம் மோனிகருடன் இந்த சாதனம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத விதமாக, NBTC பட்டியலில் டெக்னோ போவா 6 ப்ரோ (Tecno Pova 6 Pro) ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரங்கள் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், முன்பு லீக் செய்யப்பட்ட தகவலை வைத்து நமக்கு சில தகவல்கள் தெரியும்.

அதை பற்றி இப்போது பார்க்கலாம். கூகுள் ப்ளே கன்சோல் பட்டியலின்படி, Tecno Pova 6 Pro ஆனது FHD+ டிஸ்ப்ளே மற்றும் டைமன்சிட்டி 6080 சிப்செட் உடன் காணப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 12ஜிபி ரேம் உடன் காணப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 12ஜி ஒரு நல்ல அம்சம் தான். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இல் இயங்கும் என்று பட்டியல் விபரம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சாதனம் FCC அதிகாரத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதில் டெக்னோ போவா 6 ப்ரோ (Tecno Pova 6 Pro) ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா வடிவமைப்பு மற்றும் சில தகவல்கள் இந்த பக்கத்தில் இருந்து வெளியானது. இந்த FCC பட்டியலின் தகவல் படி, டெக்னோ போவா 6 ப்ரோ (Tecno Pova 6 Pro) சாதனம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இது எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவில் 1TB அல்லது 2TB வரையிலான மைக்ரோSD ஸ்டோரேஜ் ஆதரவை பெரும் என்று பட்டியல் விபரம் கூறியுள்ளது. இது 70W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும். இந்த போன் 6,000mAh பேட்டரியை பேக் செய்யும். இது குவாட் எல்இடி ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. இதன் அறிமுகம் விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.
|

Best Mobiles in India

English summary
Tecno Pova 6 Pro 5G spotted in NBTC certification before launch MWC 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X