Home
News

தூள் கிளப்புது பவர்.. ஃபுல் பவர்னா இதனா? இந்தியாவின் பவர்புல் பட்ஜெட் போன்.. யாரும் எதிர்பார்க்காத விலையில்..

இந்தியாவின் முதல் 6000mAh பேட்டரி, 70W பாஸ்ட் சார்ஜிங், 24GB ரேம் 256GB ஸ்டோரேஜ், 120Hz AMOLED டிஸ்பிளே, 108MP கேமரா என்று பட்ஜெட் செக்மென்ட்டில் எல்லா அம்சங்களையும் ஒரே போனில் பேக் செய்துள்ளது TECNO POVA 6 Pro.

டெக்னோ (Tecno) நிறுவனம் டெக்னோ போவா 6 ப்ரோ (TECNO POVA 6 Pro) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்திய ஸ்மார்ட்போன் சந்தியில் மார்ச் 29, 2024 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அட்டகாசமான பட்ஜெட் செக்மென்ட் போனின் அறிமுகத்தை நிறுவனம் இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

தூள் கிளப்புது பவர்.. ஃபுல் பவர்னா இதனா? இந்தியாவின் பவர்புல் போன்

பட்ஜெட்டில் பவர்புல் போன் டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி (Budget Powerful Phone TECNO POVA 6 Pro 5G):

இந்த புதிய டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி (TECNO POVA 6 Pro 5G) சாதனம் அமேசான் ஸ்பெஷல் அறிமுகமாக விற்பனைக்கு வரும் என்பதை அமேசான் இந்தியா வலைப்பக்க தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் 6000mAh பேட்டரி மற்றும் 70W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும். அதேபோல், இந்தியாவில் மிகவும் ஸ்லிம் சைசில் வரும் பவர்புல் சாதனமும் இதுவாகும்.

ஆம், இது மிகவும் ஸ்லிம்மான பாடியை கொண்டுள்ளது. இதன் அளவு வெறும் 7.88 mm மட்டுமே இருப்பதாக டெக்னோ விளம்பரம் செய்துள்ளது. இந்த டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி (TECNO POVA 6 Pro 5G) சாதனம் உண்மையில் பல பவர்புல் அம்சங்களை ஒரே போனிற்குள் பேக் செய்துள்ளது. இதன் டிஸ்பிளே பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.78" இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது 120Hz ரெப்ஃரஷ் ரேட் உடன் 1300 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 6080 (Mediatek Dimensity 6080) சிப்செட் உடன் வருகிறது. இது 8GB RAM + 8GB ரேம் (Virtual RAM) மற்றும் 12GB RAM + 12GB ரேம் (Virtual RAM) கொண்ட இரண்டு மாடலாக வருகிறது. மொத்தாமாக இது 16GB மற்றும் 24GB ரேம் மாடலாக வருகிறது.

தூள் கிளப்புது பவர்.. ஃபுல் பவர்னா இதனா? இந்தியாவின் பவர்புல் போன்

இவ்வளவு கம்மி விலையில் இத்தனை பவர்புல் அம்சங்களா?

இது 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா பற்றி பேசுகையில், இது 108MP கொண்ட பிரைமரி கேமராவை 3X ஜூம் உடன் வழங்குகிறது. இத்துடன் சேர்ந்து பின்பக்கத்தில் 2MP போட்ரைட் சென்சார் மற்றும் AI சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 210 மினி LED பல்ப் மூலம் உருவாக்கப்பட்ட டார்ச் லைட்டையும் இது பின்பக்கத்தில் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த 210 மினி LED லைட் மூலம் உருவாக்கப்பட்ட பின்பக்க X வடிவ ஆர்க் லைட் 100-க்கும் மேற்பட்ட கஸ்டமைசேஷன் விருப்பங்களை வழங்குகிறது. வாய்ஸ் கால், மியூசிக், பார்ட்டி மோட், நோட்டிபிகேஷன், சார்ஜிங் என்று பல விதமான பயன்பாட்டின் போது பல விதங்களில் லைட்டை ஒளிரச்செய்கிறது. இது டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி போனிற்கு ஒரு தனித்துவத்தை உருவாக்கியுள்ளது.

இந்த டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் டால்பி அட்மாஸ் சவுண்ட் காமத்தை ஆதரிக்கும் பவர்புல் டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 70W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இது வெறும் 19 நிமிடங்களில் 50% சார்ஜை நிரப்புகிறது. வெறும் 50 நிமிடங்களில் 100% நிரப்புகிறது. இதன் விலை ரூ.14,999 முதல் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA 6 Pro 5G India's First 6000mAh Battery 70W Fast Charging 120Hz AMOLED Display Budget Phone Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X