Home
News

பிப்ரவரி 8 அறிமுகமாகும் டெக்னோ போவா 5ஜி- 8ஜி ரேம், 50எம்பி கேமரா, இன்னும் பல: விலை குறைவுதான்!

டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. டெக்னோ ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கின்றனர். டெக்னோ நிறுவனம் புதுப்புது அம்சங்களோடு பல்வேறு விலைப் பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. டெக்னோ போவா 5ஜி ஸ்மார்போன் பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய போன் ஆனது டெக்னோ போவா 5ஜி என்று அழைக்கப்படுகிறது. டெக்னோ தனது முதல் 5ஜி போனை பிப்ரவரி 8 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதனம் இதுவாகும். டெக்னோ சாதனங்களின் சிறந்த அம்சங்களை இதில் எதிர்பார்க்கலாம்.

அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவிப்பு

அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவிப்பு

டெக்னோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெக்னோ போவா 5G ஆனது எல்டிபிடிஆர்5 ரேம் உடன் இணைக்கப்பட்ட டைமன்சிட்டி 900 செயலி மூலம் இயக்கப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சாதனம் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் பெரிய பேட்டரியுடன் வருகிறது.

டெக்னோ போவா 5ஜி: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

டெக்னோ போவா 5ஜி: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் இருக்கும். பின்புற கேமரா அமைப்பில் 50 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை சென்சார் மற்றும் மற்றொரு ஏஐ லென்ஸ் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.95-இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080 x 2460 பிக்சல்கள்) டிஸ்ப்ளே இருக்கும். இது சாதனத்தின் முக்கிய ஈர்ப்பாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்சேமிப்பு

டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சென் 900 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்சேமிப்பகத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்சேமிப்பு வசதி மேலும் தேவைப்படும் பட்சத்தில் இந்தச் சாதனத்தில் பிரத்யேக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் இருக்கிறது. தற்போது பெரும்பாலான ஃபோன்களில் காணப்படும் மெய்நிகர் ரேம் ஆதரவையும் டெக்னோ வழங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு சாதனத்தின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா சென்சார் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எச்ஐஓஎஸ் 8.0 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எச்ஐஓஎஸ் 8.0 ஆதரவு

டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எச்ஐஓஎஸ் 8.0 மூலம் இயங்கும். பாதுகாப்பிற்காக, சாதனம் பவர் பட்டன் மற்றும் கைரேகை சென்சார் உடன் வருகிறது. இந்த சுவிட்ச் பவர் பட்டனாகவும் கைரேகை சென்சாராகவும் செயல்படுகிறது. டெக்னோ போவா 5ஜி ஆனது 6,000 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. சாதனத்தின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரையில் இது ப்ளூடூத் v5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், வைஃபை 802.11 பி / ஜி / என், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை உடன் வருகிறது.

டெக்னோ போவா 5ஜி: இந்தியாவில் விலை

டெக்னோ போவா 5ஜி: இந்தியாவில் விலை

டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனின் சரியான விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ட்ரான்ஸிஷன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அரிஜீத் தலபத்ரா, டெக்னோவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.18,000 முதல் ரூ.20,000 வரையிலான விலையில் இந்தியாவிற்கு வரும் என்று முன்னதாக குறிப்பிட்டிருந்தார். டெக்னோவின் புதிய சாதனம் இந்த விலைப் பிரிவில் உள்ள மற்ற 5G சாதனங்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி, ஒப்போ மற்றும் விவோ போன்ற சாதனங்களுடன் டெக்னோ ஸ்மார்ட்போன் போட்டியிடும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Pova 5G Smartphone Set to Launch on February 8: Specs, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X