மூன்று கேமரா.. 5ஜி.. 6000mah பேட்டரி கொண்ட Tecno Pova 5G விலை இவ்வளவு தானா? நம்பவே முடியலையே..
Tecno Mobile நிறுவனம் இப்போது புதிதாக டெக்னோ போவா 5ஜி (Tecno Pova 5G) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் Tecno வழங்கும் முதல் 5G ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் விலை ரூ.20,000 க்கு கீழ் உள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. உண்மையில் மலிவு விலையில் கிடைக்கக் கூடிய 5ஜி ஸ்மார்ட்போனாக இந்த புதிய டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி முழு விபரம் மற்றும் விலை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிரட்டலான அம்சம் மற்றும் மலிவான விலையில் டெக்னோ போவா 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமா?
டெக்னோ போவா 5 ஜி ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு பெரிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 120Hz புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வருகிறது. உண்மையில் இது வெளிவந்துள்ள குறைவான விலையில் பயனர்களுக்குக் கிடைக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. Tecno Pova 5G ஆனது நல்ல வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய பேட்டரியையும் கொண்டுள்ளது. தெளிவாகச் சொல்லப் போனால், இந்த புதிய ஸ்மார்ட்போன் 6000 mah சக்தி கொண்ட பேட்டரி உடன் 18W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் வருகிறது.

33 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியுமா?
இந்த சாதனம் 15 நிமிட சார்ஜில் 3 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்குகிறது. மேலும் 33 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் அதன் அறிமுகத்தின் போது குறிப்பிட்டுள்ளது. டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலையைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம். இந்தியாவில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய Tecno Pova 5G ஸ்மார்ட்போன் ஆனது FHD பிளஸ் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவுடன் கூடிய 120Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் வருகிறது.

புதிய டெக்னோ போவா 5ஜி டிஸ்பிளே அம்சம்
இந்த புதிய டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போன் 6.9' இன்ச் LCD டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 20:5:9 விகிதத்துடன் 91% திரை-க்கு-உடல் விகிதத்தை வழங்குகிறது. இந்த புதிய Tecno Pova 5G ஸ்மார்ட்போனின் செயல்பாடு மற்றும் சிறந்த பயன்பாட்டிற்காக நிறுவனம் சக்தி வாய்ந்த மீடியா டெக் டிமென்சிட்டி 900 சிப்செட்டை வழங்கி, ஸ்மார்ட்போனை திறம்பட இயக்குகிறது. இதில் நாம் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது.

நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது
நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் தங்களின் டிமென்சிட்டி 900 சிப்செட் உடன் இயங்கும் சாதனங்களை ரூ. 25,000 என்ற விலைக்கும் அதிகமான விலையில் தான் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிமென்சிட்டி 900 சிப்செட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனின் ரேம் அளவை 3ஜிபி வரை விரிவுபடுத்தலாம்.

512 ஜிபி அளவு வரை அதிகரிக்க கூடிய ஸ்டோரேஜ் வசதியா?
மேலும், பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் இதில் உள்ளது என்பதனால், பயனர்கள் அவர்களுக்குத் தேவையான உள் சேமிப்பகத்தை 512 ஜிபி அளவு வரை அதிகரிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. பட்ஜெட் விலையில் 5ஜி இணக்கத்துடன் இப்படி மிக முக்கியமான அம்சங்களுடன் டெக்னோ போவா 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சமும் சிறப்பானதாக அமைந்துள்ளது.

டெக்னோ போவா 5ஜி கேமரா அம்சம்
டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சத்தைப் பற்றிப் பார்க்கையில், இது 50 எம்பி சென்சார், 2 எம்பி செகண்டரி சென்சார் மற்றும் AI லென்ஸுடன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதேபோல் செல்பி மற்றும் வீடியோ கால்ஸ் பயனிற்காக முன்பக்கத்தில் 16 எம்பி செல்ஃபி ஸ்னாப்பர் உள்ளது. இது 5G சேவையை ஆதரிக்கும் இரட்டை சிம் ஸ்லாட்டுகளைக் கொண்டுள்ளது மற்றும் கூடுதல் பாதுகாப்பிற்காகக் கைரேகை சென்சார் உட்பட அனைத்து தேவையான சென்சார்களுடன் வருகிறது.

சிறப்பான வடிவமைப்புடன் 5ஜி இணைப்புடன் குறைந்த விலையில் டெக்னோ போவா 5ஜி
டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் அம்சமும் உள்ளது. இதை வயர்டு இயர்போன் பிரியர்கள் மிகவும் பாராட்டப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. முன்பே சொன்னது போல இந்த சாதனம் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இப்படி, நாம் படிக்கும் எல்லா அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது என்பதைக் காட்டிலும், இது அனைத்தையும் ஒன்று சேர்ந்து ஒரு சிறப்பான வடிவமைப்புடன் 5ஜி இணைப்புடன் டெக்னோ நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது பாராட்டத்தக்கது.

இந்தியாவில் Tecno Pova 5G விலை என்ன?
Tecno Pova 5G ஸ்மார்ட்போன் ஒற்றை வேரியண்ட் மாடலாக மட்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் ரூ. 19,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் முதல் 1500 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,999 மதிப்புள்ள பவர் பேங்க் சாதனமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் முதல் விற்பனை வரும் பிப்ரவரி 14, 2022 அன்று தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விற்பனை அமேசான் இந்திய மற்றும் டெக்னோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications