திடீரென எல்லா போன்களிலும் வெளிவரும் புது அம்சம்.! உங்கள் மொபைல் அழகே மாறப்போகுது!
நத்திங் (Nothing) நிறுவனம் அறிமுகம் செய்த நத்திங் போன் 2 சாதனத்தின் அறிமுகத்திற்கு பின்பாக, இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அதன் அடுத்த புது ஸ்மார்ட்போனில் பேக்லைட் கொண்ட தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது. இதனை தொடர்ந்து இப்போது டெக்னோவும் (Tecno) இதை பின்பற்றியுள்ளது.
டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ போவா 5 (Tecno Pova 5) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது அமேசான் இந்தியாவில் காணப்பட்ட டீசரில் இருந்து தெளிவாகியுள்ளது. இந்தத் தொடரில் டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno Pova 5 Pro) ஆகிய இரண்டு மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய போனின் பின்புறத்தில் நிறுவனம் ஒளிரும் எல்இடி லைட்களுடன் (LED Lights) கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது என்று சமீபத்திய லைவ் புகைப்படங்கள் காட்டுகிறது. இது இந்த Tecno Povo 5 சாதனத்தில் நோட்டிபிகேஷன் இண்டிகேட்டராக (Notification indicator) செயல்படலாம் என்று கூறப்படுகிறது. டிப்ஸ்டர் இஷான்ஸ் அகர்வால் ஒரு டீஸர் வீடியோவில் இந்த அம்சத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமாக, இந்த வடிவமைப்பு டெக்னோ போவா நியோ 3 (Tecno Povo Neo 3) உடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது. இது பிராண்ட் சமீபத்திய நாட்களில் டீஸ் செய்யப்பட்ட சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. Tecno Pova 5 ஏற்கனவே உலகளவில் வெளியிடப்பட்டுள்ளதால், இதேபோன்ற சலுகை விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
டெக்னோ போவா 5 ஆனது 6.78' இன்ச் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் சூப்பர் ரெஸ்பான்சிவ் 240Hz டச் சாம்பிளிங் மாதிரி வீதமும் உள்ளது. ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் ஒரு இடைப்பட்ட ஹீலியோ ஜி99 (Helio G99 SoC) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இது தாராளமான 8 ஜிபி ரேம் உடன் இணைந்து வருகிறது. இது பல்வேறு பணிகளுக்கு மென்மையான செயல்திறனை உறுதி செய்கிறது. இந்த சாதனத்தின் தனித்துவமான அம்சம் அதன் மிகப்பெரிய 6,000mAh பேட்டரி (Battery) ஆகும். இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை (Fast charging) ஆதரிக்கிறது. இது இன்-பாக்ஸ் சார்ஜர் உடன் வருகிறது.
சார்ஜிங் அம்சம் பற்றி பேசுகையில், இந்த போன் வெறும் 21 நிமிடங்களில் பேட்டரியை 50% சார்ஜ் செய்து, 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்கிறது. Tecno Pova 5 ஆனது 10W ரிவர்ஸ் சார்ஜிங்கை (Reverse charging) ஆதரிக்கிறது. இதன் மூலம் மற்ற சாதனங்களை ரிவர்ஸ் சார்ஜ் மூலம் சார்ஜ் செய்ய உதவுகிறது.
Tecno Pova 5 ஆனது அதன் பின்புறத்தில் 50MP பிரைமரி கேமராவுடன் (Camera) சிறந்து விளங்குகிறது. சிறந்த போர்ட்ரெய்ட் புகைப்படங்களுக்காக டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8MP செல்ஃபி ஷூட்டரைப் பெறுவீர்கள். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13,490 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








