இந்த பட்ஜெட்ல.. இப்படி ஒரு Phone.. எந்த கம்பெனி கிட்டயும் இல்ல.. 6000mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங்!
டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது டெக்னோ நிறுவனம். குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் வாங்க கிடைக்கிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் டெக்னோ போவா 5 சீரிஸ் போன்களுக்கு அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டெக்னோ போவா 5 ப்ரோ போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டெக்னோ போவா 5 போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.

எச்டிஎப்சி டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த டெக்னோ போவா 5 சீரிஸ் போன்களை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடியைப் பெறமுடியும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த போன்களை இஎம்ஐ-ல் வாங்கும் பயனர்களுக்கும் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு சலுகை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது டெக்னோ போவா 5 சீரிஸ் போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.
டெக்னோ போவா 5 ப்ரோ அம்சங்கள்: ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) ஆதரவைக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் டெக்னோ போவா 5 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. மேலும் சில்வர் பேண்டஸி (Silver Fantasy), டார்க் இல்லூசன் (Dark Illusion)நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. ஆர்க் எல்இடி பேக் பேனல் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் பின்புறம் ஒளிரும் எல்இடி பேனல் உள்ளது. குறிப்பாக நோட்டிபிகேஷன், சார்ஜிங் நிலை மற்றும் கேம்கள் தொடங்கப்படுவதைப் பற்றி அறிவிப்பதற்காக இந்த போனின் பின்புறம் உள்ள எல்இடி லைட்டுகள் ஒளிரும். அதேபோல் இசையைக் கேட்கும்போது கூட எல்இடி லைட்டுகள் ஒளிரும்.
டெக்னோ போவா 5 ப்ரோ போனில் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்திலும் சிம் ஸ்லாட் இடதுபுறத்திலும் உள்ளன. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இதில் உள்ளது. பின்பு HiOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ போவா 5 ப்ரோ போன்.மேலும் 5ஜிஇ டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்விட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த போவா 5 ப்ரோ போனில் உள்ளது. பின்பு இதில் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. குறிப்பாக ரூ.14,999 பட்ஜெட்டில் எந்த நிறுவனமும் 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கியது இல்லை. ஆனால் இந்த டெக்னோ நிறுவனம் தனது பட்டெஜட் விலை போனுக்கு 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னோ போவா 5 அம்சங்கள்: 6000 எம்ஏஎச் பேட்டரி, 45 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங், 6.78 ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 8எம்பி செல்பி கேமரா, ஹீலியோ ஜி99 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த டெக்னோ போவா 5 போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனும் ரூ.11,999 பட்ஜெட்டில் 45 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குவதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








