அடிச்சு தூக்கும் ஆஃபர்.. வெறும் ரூ.12,749 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. LED பேக் பேனல்.. எந்த மாடல்?
வெறும் ரூ.12,000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், ஆர்க் எல்இடி பேனல், 68W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களை கொண்ட டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno Pova 5 Pro) விற்பனைக்கு வந்துள்ளது.
டெக்னோ போவா 5 ப்ரோ அம்சங்கள் (Tecno Pova 5 Pro Specifications): இந்த போவா போன் 6.78 இன்ச் (2460×1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டுள்ளது. அதோடு 580 பீக் பிரைட்னஸ் வருகிறகது.

இந்த டிஸ்பிளேவுக்கு என்ஈஜி கிளாஸ் பாதுகாப்பு (NEG Glass Protection) வழங்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) வருகிறது. அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது.
மிட்-ரேஞ்ச் கேமிங் பிரியர்களுக்கான மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.
அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் வேரியண்ட்டும் கிடைக்கிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (micro SD Card) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த டெக்னோ போனில், டூயல் நானோ சிம் கார்டு சிலாட் (Dual SIM Nano SIM Card Slot) மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் (micro SD Card Slot) இடம் பெற்றிருக்கிறது.
இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. அதோடு டூயல் எல்இடி பிளாஷ் (Dual LED Flash) இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஏஐ (AI) கேமராவாகும்.
அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த டெக்னோ போவா மாடலில் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியில் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் உள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.
இந்த போனில் கனெக்டிவிட்டி அம்சங்களாக, 5ஜி என்எஸ்ஏ (5G NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூக 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்ஃஎப்சி (NFC) ஆகியவை வருகின்றன. இந்த டெக்னோ போன் சில்வர் பேண்டஸி (Silver Fantasy) மற்றும் டார்க் இல்லூஷன் (Dark Illusion) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இதன் பேக் பேனலில் ஆர்க் இன்டர்பேஸ் ஆர்ஜிபி (Arc Interface RGB) எல்இடி லைட்ஸ் வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Sale) விற்பனையை முன்னிட்டு, ரூ.2,249 பேங்க் ஆஃபர் வழங்கப்படுகிறது. இதில் ரூ.750 உடனடி தள்ளுபடியாகவும், ரூ.1500 இஎம்ஐ டிஸ்கவுண்ட்டாகவும் வழங்கப்படுகிறது. இதனை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








