Just In
- 5 min ago
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- 13 hrs ago
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- 14 hrs ago
வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?
- 14 hrs ago
5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?
Don't Miss
- Automobiles
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- Movies
தாய்லாந்தில் ஹனிமூன் ஓவர்...நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் என்ன?
- News
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்ததால் பரபரப்பு!
- Finance
ஒரே வாரத்தில் ரூ.1000 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?
- Lifestyle
வார ராசிபலன் 26.06.2022-02.07.2022 - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்தியாவின் முதல் 7000mAh பேட்டரி சாதனம்: ரூ.11,499 விலையில் டெக்னோ போவா 3- அரிய வாய்ப்பு!
டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனானது 7000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

7000 எம்ஏஎச் பேட்டரி உடன் டெக்னோ போவா 3
பட்ஜெட் விலையில் 7000 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி கேமரா உடன் ஸ்மார்ட்போன் என்று கூறினால் கண்டிப்பாக சந்தேகம் வரும். காரணம் இந்த சாதனத்தின் நிர்ணய விலையை விட கூடுதல் அம்சங்கள் இதில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை தான் நாம் பார்க்கப் போகிறோம். வாருங்கள் சாதனத்தின் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

ரூ.11,499 என்ற விலையில் புது ஸ்மார்ட்போன்
டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.9 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.11,499 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஜூன் 27 முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும். இதன் பிற அம்சங்கள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் 7000எம்ஏஎச் பேட்டரி
டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனானது இன்று (ஜூன் 20) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ நிறுவனத்தின் மிக மலிவு விலை சாதனமாக இது இருக்கிறது. இந்தியாவில் 7000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் டெக்னோ போவா 3 என டெக்னோ நிறுவனம் கூறியுள்ளது.

சிறந்த கேமிங் அனுபவம்
Tecno Pova 3 ஸ்மார்ட்போனில் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குவதற்கு மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டாட் இன் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இதே Tecno Pova 3 ஸ்மார்ட்போன் மே 25 ஆம் தேதி பிலிப்பைன்ஸில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tecno Pova 3 விலை மற்றும் கிடைக்கும் தன்மை
Tecno Pova 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் எந்த விலைக்கு கிடைக்கும் மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.11,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்டில் விற்பனைக்கு கிடைக்கும். Tecno Pova 3 ஜூன் 27 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த சாதனம் ஈகோ பிளாக் மற்றும் டெக் சில்வர் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

கேமரா அம்சங்கள் மற்றும் பேட்டரி விவரங்கள்
Tecno Pova 3 ஸ்மார்ட்போனானது 6.9 இன்ச் முழு எச்டி+ (1,080x2,460 பிக்சல்கள்) டாட்-இன் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஹூட்டின் கீழ் இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் மற்றும் பேட்டரி விவரங்கள் குறித்த பிற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

50 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு
Tecno Pova 3 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் குவாட் ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 50 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கிறது. முன்புறத்தின் மையத்தில் துளை பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் பேட்டரியானது 14 மணிநேர கேமிங் நேரத்தை வழங்குகிறது.

33 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதி
7000 எம்ஏஎச் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 33 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதனத்தை 40 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போனில் டிடிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கிறது. இதற்கென சாதனத்தில் 4டி அதிர்வுகளை வழங்கும் இசட்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. கேமிங் அம்சத்துக்கு உகந்த ஸ்மார்ட்போனாக தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த சாதனம் சூடாவதை தவிர்ப்பதற்கு கிராஃபைட் குளிரூட்டும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999