Home
News

போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. 7000 ரூபாய்க்கு சூப்பர் பாஸ்ட் போன் வாங்கலாம்.. என்ன மாடல்?

வெறும் 7000 ரூபாய் விலையில் 90Hz HD+ டிஸ்பிளே, 8GB ரேம், டூயல் ரியர் கேமரா, 5000mAh பேட்டரி என்று பல அம்சங்களை பேக் செய்திருக்கும் ஒரே ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனமாக டெக்னோ பாப் 8 (Tecno POP 8) திகழ்கிறது.

டெக்னோ பாப் 8 (Tecno POP 8) இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனம் நிறுவனத்தின் பட்ஜெட் மாடலான பாப் சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சமீபத்திய லீக் தகவல், போனின் அசல் புகைப்படங்களை அண்டுடு (AnTuTu) மதிப்பெண்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் ரூ.7000 விலைக்குள் கிடைத்தாலும் இதன் AnTuTu மதிப்பெண் 240000 ஆக இருக்கிறது.

Tecno POP 8: போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..

டெக்னோ பாப் 8 (Tecno POP 8):

உண்மையில் இதுவொரு அட்டகாசமான மார்க்கிங் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான OS உடன் இயங்குகிறது. AnTuTu தளத்தில் காணப்பட்ட டெக்னோ பாப் 8 சாதனம் 2,40,205 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இதன் லைவ் இமேஜ் படம் போனின் டிஸ்பிளேவில் பன்ச் ஹோல் கட்டவுட் இருப்பதாய் காண்பிக்கிறது.

இது இந்தியாவில் விரைவில் அறிமுகமவிருக்கிறது. இதன் சரியான அறிமுக தேதி பற்றிய தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இது வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெரியாதவர்களுக்கு டெக்னோ பாப் 7 சாதனம் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் அறிமுகமானது. இந்த போனின் சிறப்பம்ச தகவலை பற்றி இப்போது பார்க்கலாம்.

டெக்னோ பாப் 8 சிறப்பம்சம் (Tecno POP 8 Specifications):
இந்த சாதனம் 6.6" இன்ச் அளவு கொண்ட HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது டிஸ்பிளேவின் மையத்தில் பன்ச் ஹோல் செல்பி கேமரா கட்டவுட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த டெக்னோ பாப் 8 சாதனம் யூனிஸாக் T606 சிப்செட் (Unisoc T606 processor) உடன் வருகிறது. இது மூன்று வகையான ரேம் (RAM) ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Tecno POP 8: போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..

இது 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என்று மூன்று விருப்பத்துடன் வருகிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த சாதனம் டூயல் கேமரா சென்சார் அம்சத்தை கொண்டுள்ளது. இது 13MP பிரைமரி கேமரா உடன் AI லென்ஸ் உடன் வருகிறது. முன்பக்கத்தில் 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5000mah பேட்டரி உடன் 10W சார்ஜிங் சப்போர்ட் அம்சத்தை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 4G LTE, பிங்கர்பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்பீக்கர், FM போன்ற அம்சங்களுடன் வருகிறது. இதில் ரேம் ஸ்டோரேஜ்ஜை எக்ஸ்டெண்ட் செய்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

இது மிஸ்டிரி வைட் (Mystery White), அல்பென்க்ளோவ் கோல்டு (Alpenglow Gold), மேஜிக் ஸ்கின் (Magic Skin), க்ராவிட்டி பிளாக் (Gravity Black) நிறங்களில் வருகிறது. இதன் விலை மிகவும் மலிவான ரூ.7000 விலையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. ரூ.7000 விலை பிரிவில் இந்த சாதனம் சூப்பர் பாஸ்ட் சாதனமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno POP 8 Launching Soon In India With 8GB RAM Dual AI Camera 5000 mah Battery Under Rs 7000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X