பக்கா பட்ஜெட்: அமேசானில் வரும் டெக்னோ பேண்டம் எக்ஸ்- 48 எம்பி டூயல் செல்பி கேமரா, 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்!

|

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் டெக்னோ பேண்டம் எக்ஸ் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என சமீபத்திய தகவல் வெளியானது. வரவிருக்கும் டெக்னோ பேண்டம் எக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு தேதி ஏப்ரல் 26 என டெக்னோ நிறுவனத்தில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏப்ரல் 28 அன்று வெளியீடு இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என ஆதாரங்கள் தெரிவிக்கிறது.

பேண்டம் எக்ஸ் அமேசான் தளத்தில் பட்டியல்

பேண்டம் எக்ஸ் அமேசான் தளத்தில் பட்டியல்

பேண்டம் எக்ஸ் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அமேசான் மூலமாக இந்த சாதனம் வாங்குவதற்கு கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

டெக்னோ பேண்டம் எக்ஸ் அமேசான்

டெக்னோ பேண்டம் எக்ஸ் அமேசான்

டெக்னோ பேண்டம் எக்ஸ் அமேசானில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அமேசான் பட்டியலின்படி, வரவிருக்கும் டெக்னோ பேண்டம் எக்ஸ் ஸ்மார்ட்போனானது வளைந்த அமோலெட் பேனலைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது ப்ரீமியம் தோற்றத்தை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பின்புற பேனலில் எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்ட டிரிபிள் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். டெக்னோ பேண்டம் எக்ஸ் ஸ்மார்ட்போனானது அல்ட்ரா எச்டி பயன்முறையை கொண்டிருக்கும் எனவும் இது 48 எம்பி டூயல் செல்பி கேமரா அமைப்புடன் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 5 ஜிபி மெய்நிகர் ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த சாதனம் 8 ஜிபி வசதியோடு வரும் என அமேசான் பட்டியல் தகவல்கள் தெரிவிக்கிறது. பிற விவரங்கள் வரவிருக்கும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48 எம்பி டூயல் செல்பி கேமரா அமைப்பு

48 எம்பி டூயல் செல்பி கேமரா அமைப்பு

48 எம்பி டூயல் செல்பி கேமரா அமைப்புடன் இது இருக்கும் எனவும், இந்த சாதனம் 5 ஜிபி மெய்நிகர் ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கும் எனவும் அமேசான் பட்டியல் தகவல்கள் தெரிவிக்கிறது. பிற விவரங்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை, வரும் நாட்களில் இந்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

108 எம்பி முதன்மை கேமரா

108 எம்பி முதன்மை கேமரா

டெக்னோ பேண்டம் எக்ஸ் சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் தகவல்களை பார்க்கலாம், டெக்னோ கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேண்டம் எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் சர்வதேச மாறுபாட்டுடன் ஒப்பிடும் போது இந்திய வேரியண்ட்டில் சிறிய மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. குறிப்பிட்டுள்ள தகவலின்படி, இந்திய மாறுபாடானது 108 எம்பி முதன்மை கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது.

48 எம்பி பிரதான லென்ஸ் செல்பி கேமரா

48 எம்பி பிரதான லென்ஸ் செல்பி கேமரா

இருப்பினும் பிற சென்சார்கள் சர்வதேச மாறுபாட்டை போன்றே இருக்கும். டெக்னோ பேண்டம் எக்ஸ் சாதனமானது முக்கிய லென்ஸ் உடன் இந்தியாவில் 13 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சாரைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் வரவிருக்கும் டெக்னோ பேண்டம் எக்ஸ் ஸ்மார்ட்போனானது 48 எம்பி பிரதான லென்ஸ் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் என இரட்டை எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

டெக்னோ பேண்டம் எக்ஸ் எதிர்பார்க்கப்படும் அம்சம்

டெக்னோ பேண்டம் எக்ஸ் எதிர்பார்க்கப்படும் அம்சம்

டெக்னோ பேண்டம் எக்ஸ் ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது முழு எச்டி ப்ளஸ் பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும் எனவும் இது இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பாதுகாப்பு அம்சத்துக்கு என இருபுறமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி சிப்செட் கொண்டிருக்கும் எனவும் இது குளிரூட்டும் அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு இந்த சாதனம் இயங்கும், இந்த ஸ்மார்ட்போனானது 4700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. டெக்னோ பேண்டம் எக்ஸ் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ரூ.20,000 விலைப்பிரிவில் வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Phantom X Smartphone Listed in Amazon: 5GB virtual RAM, 48MP Dual Selfie Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X