பிரமாதமான டிசைன்.. சூப்பர் அம்சங்களுடன் Tecno Phantom X அறிமுகத்திற்கு ரெடி.. என்ன விலை தெரியுமா?

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ நிறுவனம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்ட வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சமீபகாலமாக நிறுவனம், குறைந்த விலையில் மிகவும் தரமான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்து, விற்பனை செய்தும் வருகிறது. அந்த வரிசையில், இப்போது டெக்னோ நிறுவனம், டெக்னோ பாண்டம் எக்ஸ் (Tecno Phantom X) என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.

இந்தியாவில் Tecno Phantom X அறிமுகத்திற்கு ரெடி.. எப்போது தெரியுமா?

இந்தியாவில் Tecno Phantom X அறிமுகத்திற்கு ரெடி.. எப்போது தெரியுமா?

இந்தியாவில், வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்த புதிய டெக்னோ பாண்டம் எக்ஸ் ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. டெக்னோ நிறுவனம் கடந்த ஆண்டு பிராண்டில் இருந்து Tecno Phantom X சாதனம் ஒரு பிரீமியம் போனாக அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்லிம் மற்றும் ஸ்லீக் டிசைன் கொண்ட வளைந்த AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பையும், டேப்லெட் வடிவ கட்அவுட்டில் இரட்டை செல்ஃபி கேமராக்களையும் கொண்டுள்ளது.

Tecno Phantom X அறிமுகம் பற்றி நிறுவனம் வெளியிட்ட ட்வீட் என்ன சொல்கிறது?

Tecno Phantom X அறிமுகம் பற்றி நிறுவனம் வெளியிட்ட ட்வீட் என்ன சொல்கிறது?

Tecno Phantom X ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வண்ண விருப்பங்கள் வரும் என்றும், ஒற்றை ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மறைக்கப்பட்ட கைரேகை சென்சாருடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. Tecno Phantom X இன் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க Tecno India டிவிட்டரில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமேசான் இந்தியா பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்கு பயனர்கள் 'Notify me' பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் கைபேசியின் அறிமுகம் குறித்த அறிவிப்பைப் பெறலாம்.

கிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்புகிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்பு

இந்தியாவில் Tecno Phantom X ஸ்மார்ட் போனின் எதிர்பார்க்கப்படும் விலை

இந்தியாவில் Tecno Phantom X ஸ்மார்ட் போனின் எதிர்பார்க்கப்படும் விலை

முந்தைய கசிவுகளின் படி, இந்த புதிய இந்த Tecno Phantom X ஸ்மார்ட்போனின் விலை பிளாக்ஷிப் பிரிவில் மிகவும் குறைவாக கருதப்படுகிறது. மிரட்டலான தோற்றத்துடன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ள இந்த புதிய Tecno Phantom X ஸ்மார்ட் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் சுமார் ரூ. 25,000 என்ற விலை புள்ளிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்டார்ரி நைட் ப்ளூ மற்றும் சம்மர் சன்செட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Tecno Phantom X ஸ்மார்ட் போனின் சிறப்பம்சம்

Tecno Phantom X ஸ்மார்ட் போனின் சிறப்பம்சம்

Tecno Phantom X இன் இந்திய மாறுபாடு நெகிழ்வான வளைந்த AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று Amazon மைக்ரோ சைட் குறிப்பிடுகிறது. ஸ்மார்ட்போன் 13ஜிபி ரேம் (8ஜிபி எல்பிடிடிஆர்4x + 5ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் வரும். கேமராவை பொறுத்தமட்டில், இந்த சாதனம் 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இரட்டை செல்ஃபி கேமராவில் 48 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் லென்ஸ் இருக்கும். ஸ்மார்ட்போன் மறைக்கப்பட்ட கைரேகை சென்சாருடன் வரும்.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

புதிய Tecno Phantom X போனின் டிஸ்பிளே மற்றும் சிப்செட் விபரம்

புதிய Tecno Phantom X போனின் டிஸ்பிளே மற்றும் சிப்செட் விபரம்

இந்த புதிய Tecno Phantom X ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் முழு எச்டி+ கொண்ட 1,080 x 2,340 பிக்சல்கள் உடைய சூப்பர் AMOLED வளைந்த டிஸ்ப்ளேவுடன் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ஹூட்டின் கீழ், ஃபோன் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பகத்துடன் ஆக்டா-கோர் MediaTek Helio G95 SoC மூலம் இயக்கப்படுகிறது. Tecno Phantom X ஆனது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்டு HiOS இல் இயங்குகிறது. இது முழு பிக்சல் டூயல் கோர் லேசர் ஃபோகஸையும் கொண்டுள்ளது. கேமரா அம்சங்களில் சூப்பர் நைட் வியூ 3.0 மற்றும் ஆப்டிகல் மற்றும் டிஜிட்டல் கலவையுடன் 20x ஜூம் ஆகியவை அடங்கும். ஸ்பீக்கர் கிரில்லை ஒட்டி செல்ஃபி ஃபிளாஷ் லைட்டும் உள்ளது.

புதிய Tecno Phantom X ஸ்மார்ட் போனின் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் மற்றும் பேட்டரி

புதிய Tecno Phantom X ஸ்மார்ட் போனின் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் மற்றும் பேட்டரி

Tecno Phantom X இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் Wi-Fi, LTE, GPS, FM Radio, Bluetooth மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். Tecno Phantom X ஆனது 33W வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கும் 4,700mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. பரிமாணங்களைப் பொறுத்தவரை, தொலைபேசி 163.5x73.7x8.72mm அளவைக் கொண்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த புதிய Tecno Phantom X ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் வடிவமைப்பு வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தியச் சந்தையில் இந்த மாடல் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் 2 மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவு: 94 நிமிடங்கள் அதிர்ந்த கிரகம்.. காலனி அமைப்பதில் சிக்கலா?செவ்வாய் கிரகத்தில் 2 மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவு: 94 நிமிடங்கள் அதிர்ந்த கிரகம்.. காலனி அமைப்பதில் சிக்கலா?

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Phantom X India Launch Set for April 29 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X