இந்த போன் மட்டும் வெளிவந்தா டேப்லெட் சாம்ராஜ்யமே அழிஞ்சுடும்.! இது சாதாரண போன் இல்லை.!
இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் இப்போது மடிக்கக்கூடிய போல்டபில் ஸ்மார்ட்போன்களுக்கான (Foldable smartphone) மவுசு அதிகரித்து வருகிறது. இதனால் ஆப்பிள் (Apple), கூகுள் (Google), சியோமி (Xiaomi), ஒன்பிளஸ் (Oneplus), ஒப்போ (Oppo), விவோ (Vivo), சாம்சங் (Samsung) போன்ற முன்னணி நிறுவனங்கள் அனைத்தும், அதன் வரிசையில் புது போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த நிறுவனங்கள் எல்லாம் சாதாரண போல்டபில் போன்களை (foldable phones) உருவாக்க முயன்று வரும் நிலையில், யாரும் எதிர்பார்த்திடாத வகையில் ஒரு புது வகையான போல்டப்பில் ஸ்மார்ட்போன் சாதனத்தை டெக்னோ (Tecno) நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. டெக்னோ பாண்டம் விஷன் வி (Tecno Phantom Vision V) என்பது மடிக்கக்கூடிய டிஸ்பிளேயுடன் வரக் கூடிய டெக்னோ போல்டபில் கான்செப்ட் ஃபோனின் பெயர் ஆகும்.

ஜிஎஸ்எம்ஏரீனாவின் (GSM Arena) அறிக்கையின்படி, இப்போது உலக சந்தையில் வாங்க கிடைக்கும் மற்ற அனைத்து மடிக்கக்கூடிய மொபைல் போன் (foldable mobile phone) டிவைஸ்களிலிருந்தும் இது முற்றிலும் வேறுபட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இது ரோலிங் (Rolling dispaly smartphone) மற்றும் ஸ்லைடிங் (Sliding display smartphone) செய்ய கூடிய டிஸ்பிளேவை கொண்டிருக்கின்றன.
YouTube மூலம் பகிரப்பட்ட Tecno Phantom Vision V இன் வீடியோவில் இந்த சாதனத்தைப் பற்றிய தகவல்கள் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த போன் போல்டபில் நிலையில் இருந்து பெரிய டிஸ்பிளேவிற்கு மாறுவதை வீடியோ காட்டுகிறது. வெளிப்புற டிஸ்ப்ளே மெலிதான பெசல்கள் மற்றும் வளைந்த விளிம்புடன் இருப்பதும் இதில் தெரிகிறது. Phantom Vision V இன் பின்புறம் குவாட்-எல்இடி ஃபிளாஷ் கொண்ட டிரிபிள் கேமரா யூனிட் உடன் வருகிறது.
பின்புற ஷெல்லில் அமர்ந்திருக்கும் கேமரா தொகுதி, Phantom X2 தொடரால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த போல்டபில் போனின் கேமரா அமைப்பின் கீழ், ஒரு சிறிய டிஸ்பிளே இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இது நோட்டிபிகேஷன், கடிகாரம், ரீமைண்டர் போன்ற ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவாக செயல்படும் போல் தெரிகிறது. இந்த சாதனம் ஒரு விண்வெளி தர டைட்டானியம் அலாய் உறையுடன் வருகிறது.
இந்த டிவைஸை நாம் மடிந்தால், வழக்கமான, பாக்கெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோன் போல் தோன்றும். 11 செயல்பாட்டு அடுக்குகளால் உருவாக்கப்பட்ட இன்-டிஸ்பிளே, ஏறக்குறைய ஒரு டேப்லெட் (Tablet) சாதனம் போல சுமார் 10.1 இன்ச் வரை டிஸ்பிளே இடத்தை வழங்க கூடிய வகையில் இது விரிவடைகிறது. இப்போது வரை அறிமுகம் செய்யப்படும் போல்டபில் போன்கள் திறந்து மடக்கும் படி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த டிவைஸ் அதன் டிஸ்பிளேவை ரோல் செய்து ஸ்லைட் செய்து விரிவடையும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் டிஸ்பிளே ஏரியா நமக்கு கிடைக்கிறது. இத்தகைய சாதனம் சந்தையில் விற்பனைக்கு வந்தால், அது விரைவில் டேப்லெட்டின் சாம்ராஜ்யத்தை அழித்துவிடும் என்றும் டெக் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.
டெக்னோ பிராண்டில் இருந்து அதிகாரப்பூர்வ வார்த்தை எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், கடந்த மாதம் புளூடூத் SIG இன் தரவுத்தளத்தில் மோனிகர் காணப்பட்டதால், Tecno Phantom V போல்டபில் போனை விரைவில் எதிர்பார்க்கலாம். பிப்ரவரி இறுதியில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2023 இல், பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இந்த டிவைஸ் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது ஒரு கான்செப்ட் டிவைஸ் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது சாதனம் வணிக ரீதியாகக் கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாக இல்லை.
Image Credit: GSMArena


Click it and Unblock the Notifications








