பட்ஜெட்ல இனி Foldable Smartphone.. தம்பி Tecno இது போனா இல்லை டேப்லெட்டா? இவ்வளவு பெரிய டிஸ்பிளே இருக்கு..
இப்போது பட்ஜெட் விலையில் போல்டபில் மொபைல்களை (Foldable Mobile) வழங்கி டெக்னோ (Tecno) நிறுவனம் மக்களை குஷிப்படுத்தி வருகின்றது. அப்படி, அடுத்து வெளிவரவிருக்கும் ஒரு பட்ஜெட் போல்டபில் ஸ்மார்ட்போன் தான் டெக்னோ பாண்டம் V2 ஃபோல்ட் (Tecno Phantom V2 Fold).
டெக்னோ நிறுவனம் கடந்த ஆண்டு டெக்னோ பாண்டம் V ஃபோல்ட் (Tecno Phantom V Fold) என்ற போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது மிரட்டலான சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. பொதுவாக, ஸ்மார்ட்போன் சந்தையில் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனங்கள் அதிக விலையுடன் வருகின்றன.

ஆனால், பட்ஜெட் விலையில் கூட ஒரு தாரமான போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை மக்களுக்கு வழங்க முடியும் என்று நிரூபித்தது டெக்னோ பிராண்ட் மட்டுமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த செயலுக்கு பிறகு, இப்போது டெக்னோ நிறுவனம் அதன் அடுத்த வாரிசாக புதிய டெக்னோ பாண்டம் V2 ஃபோல்ட் (Tecno Phantom V2 Fold) என்ற சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெக்னோ பாண்டம் V2 ஃபோல்ட் (Tecno Phantom V2 Fold):
இந்த புதிய டெக்னோ பாண்டம் V2 ஃபோல்ட் (Tecno Phantom V2 Fold) போல்டபில் ஸ்மார்ட்போன் டிவைஸ் இப்போது கீக்பெஞ்ச் வலைப்பக்கத்தில் காணப்பட்டுள்ளது. இது இந்த போனின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த டெக்னோ பாண்டம் V2 ஃபோல்ட் (Tecno Phantom V2 Fold) ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்துவதோடு, இதன் முக்கியமான சிறப்பம்சங்களையும் பட்டியலிட்டுள்ளது.
கீக்பெஞ்ச் டேட்டாபேஸ் (Geekbench database) தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் AE10 என்ற மாடல் எண்ணுடன் (model number) காணப்பட்டுள்ளது. இதில் XYZ-MARS என்ற கோட்நேம் (codename) விவரத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மதர்போர்ட் (motherboard) தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை வைத்து பார்க்கையில், இது மீடியாடெக் டைமென்சிட்டி 9000+ (MediaTek Dimensity 9000+) சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

இதே சிப்செட்டை தான் டெக்னோ நிறுவனம் அதன் முந்தைய போல்டபில் ஸ்மார்ட்போன் ஆன டெக்னோ பாண்டம் V ஃபோல்ட் சாதனத்திலும் பயன்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 12GB ரேம் உடன் 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
டெக்னோ பாண்டம் V2 ஃபோல்ட் ஸ்கோர் (Tecno Phantom V2 Fold Scores):
கீக்பெஞ்ச் (Geekbench) இன் சிங்கிள்-கோர் (single-core) மற்றும் மல்டிகோர் (multicore) சோதனை முடிவுகளில், Tecno Phantom V2 Fold முறையே 1,273 மற்றும் 3,844 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது தவிர, இந்த புதிய டெக்னோ பாண்டம் V2 ஃபோல்ட் (Tecno Phantom V2 Fold) போல்டபில் ஸ்மார்ட்போன் பற்றிய மீதமுள்ள விவரங்கள் மர்மமாகவே உள்ளது.
அடுத்து வரவிருக்கும் மாதங்களில், இந்த சாதனம் பற்றிய கூடுதல் தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நினைவுகூர, டெக்னோ பாண்டம் V ஃபோல்ட் (Tecno Phantom V Fold) சாதனம் 6.42" இன்ச் FHD+ மெயின் டிஸ்பிளே மற்றும் 7.85" இன்ச் உள்பக்க டிஸ்பிளேவுடன் வந்தது. இந்த இரண்டு டிஸ்பிளேக்களும் AMOLED LTP உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டிருந்தது.
இது 50MP மெயின் கேமரா + 50MP டெலிபோட்டோ சென்சார் மற்றும் 13MP அல்ட்ரா வைடு சென்சார் உடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருந்தது. இது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.69,999 விலையில் வருகிறது.


Click it and Unblock the Notifications








