ஒரே போனில் 7 கேமரா சென்சார்.. Tecno Phantom V Yoga என்னும் யுனிக் ஃபிளிப் மாடல்!
ஃபிளிப் போன் (Flip Phone) மாடல்களிலேயே முதல்முறையாக 7 கேமிரா சென்சார்களுடன் டெக்னோ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் டெக்னோ பேண்டம் வி யோகா போன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் ட்விட்டரில் கசிந்துள்ளது. அதுகுறித்த விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு ஸ்மார்ட்போனுக்கு அம்சங்கள் (Specification) எவ்வவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த போனின் டிசைனும் (Design) முக்கியம் என்றே சொல்ல வேண்டும். இப்போது விற்பனைக்கு வரும் பல போன்கள் சிறப்பான அம்சங்களை கொண்டிருக்கவில்லை என்றாலும், நல்ல லுக்கான டிசைனுக்காக, அதன் விற்பனை படுஜோராக இருக்கும்.

இப்படி தனித்துவமான டிசைன்களில் (Unic Design) போன்களை வெளியிட்டுவரும் டெக்னோ (Tecno) நிறுவனம், டிசைனில் மட்டுமல்லாமல், அம்சங்களிலும் அசத்தும் வகையில் டெக்னோ பேண்டம் வி யோகா (Tecno Phantom V Yoga) என்னும் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இதில் அல்டிமெட் விஷயம் என்னவென்றால், மற்ற எந்த நிறுவத்தின் ஸ்மார்ட்போன்களை காட்டிலும் அதிகமாக கேமரா சென்சார்களை இது கொண்டுள்ளது.
மெயின் மற்றும் செல்பீ கேமராக்களை சேர்ந்து மொத்தமாக 7 கேமர சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு மீடியா டெக் டைமன்சிட்டி சிப்செட், 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என்று ஸ்மார்ட்போன் பிரியர்களை ஈர்க்கும் வகையில் டெக்னோ பேண்டம் வி யோகா உள்ளது. இந்த போனின் முழு அம்சங்கள் மற்றும் விலை குறித்த காண்போம்.
டெக்னோ பேண்டம் வி யோகா அம்சங்கள்: இந்த போன் 6.75 இன்ச் (1080 x 2520 பிக்சல்கள்) எச்டிஆர்10பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. டிஸ்பிளேவிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரெட்டெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 உடன் மீடியா டெக் டைமன்சிட்டி 8050 எஸ்ஓசி (Mediatek Dimensity 8050 SoC) ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 64 எம்பி மெயின் கேமரா மூன்று பாகங்களாக வருகிறது. அதில் 50 எம்பி ஸ்போர்ட்ஸ் சென்சார் + 32 எம்பி டெலிபோட்டோ சென்சார் + 8 எம்பி அல்ட்ரா வைட் +2 எம்பி ஆட்டோ போகஸ் லென்ஸ் +5 எம்பி கேமரா செட்டப் உள்ளது.
அந்த வகையில், மொத்தமாக 7 கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உடன் வருகிறது. 4000 எம்ஏஎச் பேட்டரி 66W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ பேண்டம் வி யோகா போனில் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) வசதியும் உள்ளது. விலையை பொறுத்தவரையில், ரூ. 1,05,575 விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
இந்த போனின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. டெக்னோ பேண்டம் வி யோகா மாடல், லேவண்டர் (Lavender) கலரில் விற்பனைக்கு வரும். இந்த போனின் போட்டோக்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த ஃபிளிப் போன் மாடல், ஓப்போ, சாம்சங், கூகுள் போன்ற நிறுவனங்களின் போன்களுக்கு நிகராக விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








