இந்த போல்டபில் Phone பார்க்கவே அட்டகாசமா இருக்கு! ஆனா இந்த விலையில யார் இதை வாங்குவா?
மடிக்கக்கூடிய போல்டபில் ஸ்மார்ட்போன்களுக்கான மவுசு உலகளவில் அதிகரித்துவிட்டது. இந்த விஷயத்தை அறிந்த Tecno நிறுவனம் சமீபத்தில் Tecno Phantom V Fold என்ற போனை அறிமுகம் செய்தது. இதன் இந்திய அறிமுகம் இப்போது நெருங்கிவிட்டது. இதன் விலை என்ன? நம்பி வாங்கலாமா?
மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்வின் போது, டெக்னோ நிறுவனம் இந்த சாதனத்தை உலகளவில் அறிமுகம் செய்தது, இதற்கு பிறகு, Tecno Phantom V Fold ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சாதனம் இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது என்று Tecno அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒரு போல்டபில் ஸ்மார்ட்போன் மாடலாகும். அதுவும் இது, 'மேட் இன் இந்தியா' சாதனமாகும்.

Tecno Phantom V Fold ஸ்மார்ட்போன் சாதனம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது ஏப்ரல் 12 முதல் Amazon இல் ஆரம்பகால அறிமுக சலுகையுடன் குறைந்த விலையில் வாங்குவதற்கு கிடைக்கும். டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி, டெக்னோ பாண்டம் வி ஃபோல்ட் சாதனம் நொய்டா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.
சரி, இப்போது இந்த புதிய Tecno Phantom V Fold ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். இது ஏரோஸ்பேஸ்-கிரேடு டிராப்-வடிவ ஹிஞ் கொண்ட ஒரு நிலையான-ஆக்சிஸ் ரொட்டேஷன் மற்றும் ஸ்லைடு மெக்கானிசம் உடன் கூட அட்டகாசமான ரிவர்ஸ் ஸ்னாப் அமைப்புடன் ஒரு சிறந்த போல்டபில் போனாக வருகிறது. இது 6.42' இன்ச் FHD+ LTPO வெளிப்புற AMOLED டூயல் 10Hz-120Hz டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இதன் பெரியாறு டிஸ்பிளேவானது அல்ட்ரா பிளாட் மற்றும் டூயல் பீக் பிரைட்னஸ் மற்றும் டூயல் பீக் கலர் கிளாரிட்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் 7.65 இன்ச் 2K திறன் கொண்ட 10-120Hz LTPO AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Tecno Phantom V Fold ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 50MP கொண்ட 2x போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவை அடங்கும்.

இதன் வெளிப்புறத் டிஸ்பிளேவில் உள்ள செல்பி கேமரா 32MP உடன் வருகிறது மற்றும் உள் டிஸ்பிளேவில் வைக்கப்பட்டுள்ள 16MP கேமராவும் செல்ஃபி கேமராவாக வருகிறது. இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமென்சிட்டி 9000+ சிப்செட் உடன் இயங்குகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது. இது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
டெக்னோ பாண்டம் வி ஃபோல்டில் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போனில் 5G SA/NSA, டூயல் 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.3 மற்றும் USB Type-C போன்றவை உள்ளன. ஆரம்பத்தில், நிறுவனம் இந்தியாவில் Tecno Phantom V Fold இன் விலையை 12GB+256GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.89,999 என்று அறிவித்தது.
அதேபோல், இதன் 12GB+512GB ஸ்டோரேஜ் மாடலுக்கு விலை ரூ.99,999 என்று அறிவித்தது. ஆனால் ஆரம்பகால அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, இந்த Tecno Phantom V Fold ஸ்மார்ட்போன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ரூ.77,777 என்ற விலையில் வாங்க கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பிராண்டில் இவ்வளவு அதிகமான விலை கொடுத்து யார் இந்த போனை வாங்குவார்கள் என்பது சந்தேகமாகவுள்ளது. உங்கள் கருத்து என்ன என்பதை பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications