செஞ்சுட்டான்யா Tecno.. கம்மி விலை போல்டப்பிள் போன்னா இதான்.. ஒட்டுமொத்தமா விற்று தீர்ந்தது..
டெக்னோ (Tecno) நிறுவனம் கடத்த ஏப்ரல் மாதம் அதன் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் மாடலான டெக்னோ பாண்டம் வி ஃபோல்டு (Tecno Phantom V Fold) சாதனத்தை அறிமுகம் செய்தது. இது மலிவு விலை விருப்பமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Tecno Phantom V Fold இன் ஒட்டுமொத்த யூனிட்களையும் டெக்னோ நிறுவனம் விற்பனை செய்து முடிவிட்டதாம். இதனால், விரைவில் அடுத்த தலைமுறை போனை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
டெக்னோ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் வழியாக, புதிய டெக்னோ பாண்டம் வி ஃ போல்ட் 2 (Tecno Phantom V Fold 2) என்ற போல்டபிள் ஸ்மார்ட்போனின் வருகையை நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த புதிய மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாதனம், கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு, ஒட்டுமொத்த யூனிட்களையும் அமேசானில் விற்பனை செய்து முடித்த போனின் அடுத்த வெர்ஷனாக வருகிறது.

டெக்னோ பாண்டம் வி ஃ போல்ட் 2 (Tecno Phantom V Fold 2):
இது Tecno Phantom V Fold மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வருமென்று கூறப்பட்டுள்ளது. புதிய டெக்னோ பாண்டம் வி ஃ போல்ட் 2 (Tecno Phantom V Fold 2) விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய டெக்னோ பாண்டம் வி ஃ போல்ட் 2 (Tecno Phantom V Fold 2) அடுத்த மலிவு விலை மாடக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த புதிய சாதனம் ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open), மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra), சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6) போன்ற போன்களுக்கு போட்டியாக வரும் என்று கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, டெக்னோ பிராண்டின் டெக்னோ பாண்டம் வி ஃ போல்ட் மாடல் ரூ. 88,888 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதைவிட பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், இந்த புதிய Tecno Phantom V Fold 2 அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போனில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
டெக்னோ பாண்டம் வி ஃ போல்ட் 2 சிறப்பம்சம் (Tecno Phantom V Fold 2 Specifications):
புதிய Tecno Phantom V Fold 2 சாதனம் 7.85" இன்ச் AMOLED டிஸ்பிளேவை வழங்கும். இதில் 6.42" இன்ச் FHD+ AMOLED கவர் டிஸ்பிளேவை வழங்கும். இந்த புதிய சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 9000+ (MediaTek Dimensity 9000+ chipset) உடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த போல்டபிள் போன் (Foldable phone) 50MP + 50MP + 50MP என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.
முந்தைய மாடல் 50MP + 13MP + 50MP கேமராவுடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 5700mAh பேட்டரி 70W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது 12GB + 512GB ஸ்டோரேஜ் உடன் ரூ. 92,400 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) விலை இந்தியாவில் ரூ. 1,04,999 மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) ரூ. 89,999 மற்றும் சாம்சங் கேலக்ஸி Z பிலிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ரூ. 1,09,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஒப்பிடுகையில், டெக்னோவின் புதிய போனின் விலை மலிவாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








