மலிவு விலை இப்படி ஒரு ஃபிலிப் போனா? டிசைனே அள்ளுதே.. நாளைக்கே வாங்குனா மட்டும் தான் இந்த ரேட்..
சாதாரண டிசைன் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இப்போது இந்தியாவில் மவுசு குறைய துவங்கிவிட்டது. பெரும்பாலான மக்கள் அவர்கள் வாங்கும் புதிய போனில், ஏதேனும் புதுமை இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதற்கு ஏற்றார் போல இந்தியாவில் போல்டபில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது.
சாம்சங் (Samsung), ஒப்போ (Oppo), ஒன்பிளஸ் (OnePlus) போன்ற முன்னணி பிராண்டுகள், இப்போது போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனங்களை வழங்க துவங்கியுள்ளன. இன்னும் சில முன்னணி பிராண்டுகள் அவர்களின் தயாரிப்பு பட்டியலில் புதிய போல்டபில் போன்களை வடிவமைத்து வேகமாக உருவாக்கி வருகின்றனர். போல்டபில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியுள்ளது.

இது வருகிற 2024 ஆம் ஆண்டில் இரட்டிப்பாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், மிகவும் குறைந்த விலையில் சில நிறுவனங்கள் போல்டபில் ஸ்மார்ட்போன்களை வழங்க முன்வந்துள்ளன. அதிலும் குறிப்பாக, டெக்னோ போன்ற நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் ஒரு போல்டபில் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல் நாளை முதல் விற்பனை வருகிறது.
டெக்னோ இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அதன் முதல் கிளாம்ஷெல் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகப்படுத்தியது. மலிவு விலைக் குறியுடன், போல்டபில் ஸ்மார்ட்போன்களை பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதை இந்த மாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. உண்மையில், நீங்கள் இப்போது கைப்பற்றக்கூடிய மலிவான ஃபிளிப் போன்களில் இதுவும் ஒன்றாகும்.
இது டெக்னோ ஃபாண்டம் வி ஃபிலிப் (Tecno Phantom V Flip) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது எல்டிபிஓ அமோலேட் (LTPO AMOLED) டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டிமென்சிட்டி 8050 5ஜி (MediaTek Dimensity 8050 5G) சிப்செட்டைக் கொண்டு வருகிறது. இந்த சாதனம் நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரும் என நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விபர தகவல் இதோ.
டெக்னோ ஃபாண்டம் வி ஃபிலிப் (Tecno Phantom V Flip) இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) மூலம் விற்பனைக்கு வரும். ஆரம்ப விற்பனையின் போது, ஐகானிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் டான் ஆகிய இரு வண்ண விருப்பங்களிலும் இந்த சாதனம் கிடைக்கும். அறிமுக சலுகையாக இந்த சாதனம் ரூ.49,999 ($598) என்ற விலையில் வாங்க கிடைக்கும்.

இதன் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, Tecno Phantom V Flip ஆனது 466 x 466 தீர்மானம் கொண்ட AMOLED பேனலுடன் 1.32' இன்ச் கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டு வருகிறது. உட்புறத்தில், ஃபோனில் 6.9' இன்ச் FHD+ (1080 x 2460 பிக்சல்கள்) நெகிழ்வான LTPO AMOLED பேனல் 20.5:9 விகிதத்துடன், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வருகிறது.
முன்பே சொன்னது போல, இந்த சாதனம் MediaTek Dimensity 8050 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த Dimensity 8050 என்பது அடிப்படையில் மறுபெயரிடப்பட்ட Dimensity 1300 சிப்செட் ஆகும் என்பது கவனிக்கத்தக்கது. இது TSMC இன் N6 (6nm) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த புதிய மலிவு விலை ஃபிளிப் ஃபோன் 13எம்பி அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 32எம்பி செல்ஃபி கேமராவுடன் 64எம்பி பிரைமரி ஷூட்டரைப் பெறுகிறது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரி மூலம் இயங்குகிறது. இது வெறும் 10 நிமிடங்களில் 33% பேட்டரியை நிரப்பும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








