அலறவிடும் வட்ட டிஸ்பிளே.. 2 ஃபோல்டபில் டிஸ்பிளே.. டூயல் பேட்டரி.. தெறி பறக்கும் Tecno Phantom V Flip 5G..
ஸ்மார்ட்போன் சந்தை இப்போது புத்துணர்ச்சி பெற்று வருகிறது. பல புதிய பரிமாணங்களில் ஸ்மார்ட்போன்கள் களமிறங்க துவங்கிவிட்டன. குறிப்பாக, ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் இப்போது மக்களின் கவனத்தை ஈர்க்க துவங்கியுள்ளன. ஆனால், இவை விலை அதிகமாக இருக்கிறது. இந்த கருத்தை இப்போது டெக்னோ உடைந்துவிட்டது.
சமீபத்திய ஆண்டுகளில், மடிக்கக்கூடிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமாக அதிகரித்து வருகிறது. நார்மல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பீட்டளவில் அதிக விலையாக இருந்த போதிலும் குறிப்பிடத்தக்க உயர் இழுவையை இந்த ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெக்னோ (Tecno) அதன் அறிமுக சாதனமான பாண்டம் வி ஃபோல்டுடன் மடிக்கக்கூடிய சந்தையில் நுழைந்தது. ஆச்சரியப்படும் விதமாக, இந்த ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் (Samsung) நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) போன்ற போட்டியாளர்களை விட கிட்டத்தட்ட 50% குறைவான விலையில் அதன் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்து அசத்தியது.
இப்போது, டெக்னோ நிறுவனம் மற்றொரு தயாரிப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அது தான் புதிய டெக்னோ ஃபாண்டம் வி ஃபிலிப் 5ஜி (Tecno Phantom V Flip 5G) என பெயரிடப்பட்ட மிட்-ரேஞ்ச் ஃபிளிப் ஃபோன் சாதனமாகும். குறிப்பிடத்தக்க லீக் தகவலின் ஆதாரமான பராஸ் குக்லானியின் தகவல் படி, இந்த வரவிருக்கும் சாதனத்தின் ரெண்டார் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்பு விபரங்களை இணையத்தில் கசிய விட துவங்கியுள்ளன.
நியூஸோன்லியின் சமீபத்திய கட்டுரையின் படி, இன்சைடர் பராஸ் குக்லானி வரவிருக்கும் டெக்னோ ஃபாண்டம் வி ஃபிலிப் 5ஜி (Tecno Phantom V Flip 5G) இன் ரெண்டர் செய்யப்பட்ட புகைப்படங்களை இவர் தற்போது வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு கவர் டிஸ்பிளேவில் மிகவும் தனித்துவமான ஒரு வடிவமைப்பை புகைப்படங்கள் காண்பித்துள்ளது.
இந்த சாதனத்தின் டிஸ்பிளே மிகவும் புதிய மாதிரியானது மற்றும் புதிரானதாக காட்சியளிக்கிறது. வழக்கமான ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் போல மடக்கக்கூடிய டிஸ்பிளேவை இந்த போன் கொண்டிருந்தாலும், இதன் கேமரா பம்பில் நிறுவனம் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. வட்டமான கேமரா அமைப்பின் மத்தியில் இந்த சாதனம் ஒரு வட்ட வடிவ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

பின்புறத்தில், இந்த சாதனம் 64MP AF + 13MP சென்சார்கள் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், இந்த சாதனம் 32MP கேமராவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் வெளிப்புற டிஸ்பிளே 466 × 466 தெளிவுத்திறனுடன் 1.32' இன்ச் அளவு கொண்ட அமோலட் (AMOLED) பேனலைக் கொண்டிருக்கும். உட்புறத்தில், சாதனம் 1080 × 2640 தெளிவுத்திறனுடன் 6.9' இன்ச் அமோலட் (AMOLED) டிஸ்பிலேவை கொண்டிருக்கும்.
இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 8050 (Media dimensity 8050) சிப்செட்டைக் கொண்டிருக்கும். இந்த சந்தையில் உள்ள மற்ற மடிக்கக்கூடிய பொருட்களைப் போலவே, Tecno Phantom V Flip 5G ஆனது 1165mAh மற்றும் 2735mAh பேட்டரிகளால் உருவாக்கப்பட்ட டூயல் பேட்டரி அமைப்புடன் வருகிறது. மொத்தமாக இது 4000mAh திறன் கொண்டதாக சந்தைப்படுத்தப்படும்.
இது ஆண்ட்ராய்டு 13 ஐ வழங்கும். இது மினிமம் பிளாக், ஃபிலிம் ஒயிட் மற்றும் பெரிவிங்கிள் பர்பில் வண்ண விருப்பங்களில் வரும். கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 14 வெவ்வேறு 5G பேண்டுகளை ஆதரிக்கும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. டெக்னோ பாண்டம் வி ஃபிலிப் 5ஜி (Tecno Phantom V Flip 5G) ஆரம்ப டீசர் அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த போனை நிறுவனம் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








