Home
News

பட்ஜெட் ஹை-கிளாஸ்.. வெறும் ரூ.37,999 போதும்.. 8GB ரேம்.. 512GB மெமரி.. மெட்டல் பாடி வேற.. எந்த மாடல்?

ரூ.50,000 மதிப்புள்ள லேப்டாப்களில் கொடுக்கப்படும் அம்சங்களுடன் டெக்னோ மெகாபுக் டி1 (TECNO MEGABOOK T1) மாடல்கள் கம்மிவிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் எர்லி பேர்ட் விற்பனை அமேசானில் தொடங்கியிருக்கிறது. ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ

டெக்னோ மெகாபுக் டி1 அம்சங்கள் (TECNO MEGABOOK T1 Specifications): இந்த டெக்னோ லேப்டாப் 15.6 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 100% எஸ்ஆர்ஜிபி (sRGB) மற்றும் 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.

ரூ.37,999 போதும்.. 8GB ரேம்.. 512GB மெமரி.. மெட்டல் பாடி.. எந்த மாடல்?

இதில் 180 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கும். அதோடு டிசி அடாப்டிவ் டிம்மிங் (DC Adaptive Dimming) டெக்னாலஜி கொண்டுள்ளது. இந்த லேப்டாப் 14.8 மிமீ ஸ்லிம் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. அலுமினியம் மெட்டல் கேஸிங் (Aluminium Metal Casing) பாடி கொண்டுள்ளது.

இந்த டெக்னோ மெகாபுக் டி1 லேப்டாப் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய 3 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. 11ஆவது ஜென் இன்டெல் கோர் ப்ராசஸர் (11th Gen Intel Core processor) வருகிறது.

இதில் ஐ3 (i3), ஐ5 (i5) மற்றும் ஐ7 (i7) ஆகிய மூன்று மாடல்கள் இருக்கின்றன. இந்த லேப்டாப்பின் பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 17.5 மணி நேரம் பேக்கப் கிடைக்கும். இந்த பேட்டரி 70Wh சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 65W சப்போர்ட் கொண்ட நெக்ஸ்ட்-ஜென் ஜிஏஎன் (Next-gen GaN) சார்ஜர் வருகிறது.

பேட்டரி மற்றும் சிப்செட் பாதுகாப்புக்காக விசி கூலிங் (VC Cooling) மற்றும் டூயல் பேன் சிஸ்டம் (Dual Fan System) வருகிறது. இந்த லேப்டாப் ஸ்டார்ரி பேக்லிட் கீபோர்ட் (Starry Backlit Keyboard) கொண்டிருக்கிறது. 2 எம்பி பிசிகல் பிரைவசி கேமரா (Physical Privacy Camera) கொடுக்கப்பட்டுள்ளது.

பிங்கர்பிரிண்ட் பவர் பட்டன் (Fingerprint Power Button) வருகிறது. இந்த லேப்டாப்பிலும் டெக்னோ விஓசி பீச்சர்கள் (TECHNO VOC Features) வருகின்றன. அந்த வகையில், டெக்னோ ஆடியே லேப் (TECNO Audio Lab), ஏஐ இஎன்சி டெக்னாலஜி (AI ENC Technology) உடன் கூடிய டூயல் மைக் பிளஸ் (Dual Mic Plus) உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதோடு டிடிஎஸ் (DTS) ஆடியோ சப்போர்ட் வருகிறது. ஒன் லீப் மல்டி-ஸ்கிரீன் கோலாப்ரேஷன் (One Leap Multi-Screen Collaboration) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் டெக்னோ லிங் (TECNO Link) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

மேலும், டிஎப் கார்டு ரீடர் ( TF Card Reader), 2 யுஎஸ்பி போர்ட், 2 டைப்-சி போர்ட், 1 எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் வருகிறது. இந்த லேப்டாப் 1.56 கிலோ எடைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் டெனிம் ப்ளூ (Denim Blue), ஸ்பேஸ் கிரே (Space Grey) மற்றும் மூன்சைன் சில்வர் (Moonshine Silver) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இதன் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஐ7 மாடலின் விலை ரூ.59,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 டிபி மெமரி கொண்ட ஐ5 மாடலின் விலை ரூ.49,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஐ3 மாடலின் விலை ரூ.39,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் எர்லி பேர்ட்ஸ் (Early Birds) விற்பனை அமேசான் (Amazon) தளத்தில் இன்று (செப்டம்பர் 13) தொடங்கியிருக்கிறது.

இதற்கு பின் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் வழக்கமான விற்பனை தொடங்கும். இந்த எர்லி பேர்ட்ஸ் விற்பனையில், ரூ.2000 தள்ளுபடி விலையில், இந்த லேப்டாப் மாடல்கள் கிடைக்கின்றன. ஆகவே, இந்த டெக்னோ மெகாபுக் லேப்டாப்பின் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.37,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
TECNO MEGABOOK T1 With 16GB RAM, 11th Gen Intel Core Processor Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X