தினுசு தினுசா யோசிப்பீங்களா? ஒரே நேரத்தில் நச்சுனு 4 போன் அறிமுகம்! பட்ஜெட் முதல் பிரீமியம் 5G வரை!
இந்த ஸ்மார்ட்போனை பார்த்தவுடன், இது என்னப்பா இந்த போன் ஒரு தினுசா இருக்கு.. என்ன டிசைன் இது? என்று நம்மை யோசிக்க வைக்கிறது இதன் வடிவமைப்பு. சற்று உற்றுநோக்கினால், அடடா-நல்லாருக்கே.. இதன் விலை என்ன? என்று நம்மை கேட்கவைக்கிறது இதன் ஸ்பெக்ஸ்.
தினுசான டிசைனில் 4 புது ஸ்மார்ட்போன்களை பாரபட்சம் பார்க்காமல் ஒரே வேளையில் அறிமுகம் செய்தது வேறு யாரும் இல்லைங்க, நம்ம டெக்னோ (Tecno) நிறுவனம் தான். Tecno நிறுவனம் அதன் காமன் 20 (Camon 20) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் நிறுவனம் மொத்தம் 4 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு நெட்வொர்க்கில் இயங்கும் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டெக்னோ நிறுவனம் இன்று, புதிதாக டெக்னோ காமன் 20 (Tecno Camon 20), டெக்னோ காமன் 20 ப்ரோ (Tecno Camon 20 Pro), டெக்னோ காமன் 20 ப்ரோ 5ஜி (Tecno Camon 20 Pro 5G) மற்றும் டெக்னோ காமன் 20 பிரீமியர் 5ஜி (Tecno Camon 20 Premier 5G) என்ற 4 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 4 ஸ்மார்ட்போன்களும் மீடியா-டெக் சிப்செட்டைக் கொண்டுள்ளன.
இவை அனைத்தும் FHD+ தெளிவுத்திறன் கொண்ட 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடைய ஒரே மாதிரியான 6.67' இன்ச் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் பயோமெட்ரிக்ஸிற்கான இன்-ஸ்கிரீன் ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை கொண்டுள்ளன. Tecno Camon 20 மற்றும் Tecno Camon 20 Pro முறையே மீடியாடெக் ஹீலியோ G85 மற்றும் G99 சிப்செட்களுடன் வருகின்றன.
அதேபோல், Tecno Camon 20 Pro 5G மற்றும் Tecno Camon 20 Premier 5G ஆகிய இரண்டு மாடல்களும் புதிதாக அறிவிக்கப்பட்ட Dimensity 8050 சிப்செட்டை கொண்டுள்ளன. இது அடிப்படையில் Dimensity 1300 சிப்செட்டின் மறுபதிப்பு பதிப்பாகும். இந்த 4 போன்களும் 8ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவைப் பெறுகின்றன. டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி மட்டும் 512ஜிபி ஸ்டோரேஜ்ஜாய் கொண்டுள்ளது.

மற்ற அணைத்து மாடல்களும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகின்றன. இந்த போன்களில் ஓவர் ஹீட்டிங் சிக்கலை குறைக்கும் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 போன்கள் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கின்றன. ஆனால், டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி மாடல் மட்டும் 45W பாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது.
கேமரா பற்றி பேசுகையில், Tecno Camon 20 மற்றும் Camon 20 Pro ஆகியவை 2MP டெப்த் யூனிட் மற்றும் AI லென்ஸுடன் இணைக்கப்பட்ட 64MP பிரைமரி சென்சாரை கொண்டுள்ளது. Tecno Camon 20 Pro 5G ஆனது 64MP பிரைமரி மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ்களை கொண்டுள்ளது. ஆனால், AI லென்ஸை 2MP பொக்கே சென்சார் மூலம் மாற்றியுள்ளது.
Tecno Camon 20 Premier 5G ஆனது சென்சார்-ஷிப்ட் OIS உடன் 50MP RGBW பிரைமரி சென்சார், 108MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் ஆக்டா-ரிங் ஃபிளாஷ் கொண்ட 2MP பொக்கே யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், Tecno Camon 20 சீரிஸ் போன்கள் அனைத்துமே 32MP செல்ஃபி ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது. டெக்னோ கேமன் 20 மற்றும் 20 ப்ரோ ஆகியவை 4ஜி போன்களாகும்.
டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி மற்றும் கேமன் 20 பிரீமியர் 5ஜி ஆகியவை 5ஜி மாடல்களாகும். இதன் விலை பற்றி பேசுகையில், Tecno Camon 20 ரூ.16,000 விலையிலும், Tecno Camon 20 Pro roo.18,990 விலையிலும், Tecno Camon 20 Pro 5G ரூ.26,000 விலையிலும், Tecno Camon 20 Premier 5G ரூ.29,999 என்ற விலையிலும் வருகிறது.


Click it and Unblock the Notifications








