Home
News

இறங்கி அடிக்கும் விலை.. மாஸ்டர் பீஸ்.. ஆர்டிஸ்டிக் லுக்கில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்..

ஸ்மார்ட்போன் சந்தையில் சாதாரண டிஸைன் கொண்ட மொபைல்கள் நிரம்பி வழிகின்றன, அந்த வரிசையில் தனித்து நிற்க பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல புதிய யுக்திகளை கையாள்கின்றன. அப்படி ஒரு புதுமையான முறையை கையாண்டு உருக்கப்பட்ட சாதனம் தான் இந்த புது ஸ்மார்ட்போன்.

டெக்னோ காமன் 20 அவோகடோ ஆர்ட் எடிஷன் (TECNO CAMON 20 Avocado Art Edition) ஆனது வழக்கமான ஸ்மார்ட்போன் மாறுபாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய டெக்னோ காமன் அவோகடோ ஆர்ட் எடிஷன் பின்புறத்தில் ப்ரீமியம் லெதர் ஃபினிஷுடன் கிரீன் நிறத்தில் எம்போஸ்ட்டு அமைப்பு மற்றும் கிராஃபிட்டி ஆர்ட்ஸ் நுணுக்கங்களுடன் வருகிறது.

இறங்கி அடிக்கும் விலை.. மாஸ்டர் பீஸ்.. ஆர்டிஸ்டிக் லுக்கில் புது போன்!

மிஸ்டர் டூடுல் எடிஷன் டெக்னோ காமன் 20 ப்ரோ (TECNO Camon 20 Pro) மற்றும் டெக்னோ காமன் 20 பிரிமியர் மாடலுக்குப் பிறகு டெக்னோ காமன் 20 (TECNO CAMON 20) வரிசையின் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் மாடல் இதுவாகும். இந்தியாவில் TECNO CAMON 20 Avocado Art Edition விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். டெக்னோ கேமோன் 20 அவகேடோ ஆர்ட் எடிஷனை அமேசான் இந்தியா இணையதளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கும்.

இதுத்தவிர, இந்தியாவில் உள்ள முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்தும் இதை வாங்கலாம். இந்த புதிய ஆர்டிஸ்டிக் லுக் உடன் கண்களை கவரும் ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.15,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதன் அம்சம் பற்றி பேசுகையில், இது 6.67' இன்ச் கொண்ட FHD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் உடன் வருகிறது.

இதன் டிஸ்பிளே AMOLED தரத்துடன் முழு HD+ கொண்ட 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் சிப்செட் உடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 மற்றும் HiOS 13 உடன் வருகிறது.

இது 64MP பிரைமரி கேமரா, PDAF, 2MP டெப்த் சென்சார், AI கேமரா, குவாட் LED ரிங் ஃபிளாஷ் உடன் 32MP கேமரா உடன் வருகிறது. இது டூயல் சிம் கார்டு ஸ்லாட், 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, ப்ளூடூத் v5/2, GPS, NFC, 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், FM ரேடியோ, USB டைப்-சி போர்ட், 5000mAh உடன் 33W பாஸ்ட் சார்ஜிங்.

இறங்கி அடிக்கும் விலை.. மாஸ்டர் பீஸ்.. ஆர்டிஸ்டிக் லுக்கில் புது போன்!

தற்போது, ​​TECNO CAMON 20 Avocado Art Edition Amazon இல் பட்டியலிடப்படவில்லை. இருப்பினும், அமேசான் இந்தியா கிடைப்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது, எனவே விரைவில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது இந்த ஸ்மார்ட்போன் நாட்டில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே கிடைக்கிறது. நீங்கள் வாங்க போகும் ஸ்மார்ட்போன் தனித்துவமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் இந்த போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO CAMON 20 Avocado Art Edition launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X