இது போனா இல்ல வேற எதுவுமா? Tecno Camon 19 Pro Mondrian மீது அட்டகாச தள்ளுபடி.!

|

இந்த போன் மீது இவ்வளவு சலுகை, அந்த போன் மீது அவ்வளவு தள்ளுபடி என்று ஓவரான தள்ளுபடியை வழங்கி மக்களை இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் திகைப்படையச் செய்துவிட்டன. எந்த போனை வாங்குவது என்ற குழப்பத்தில் தான் நாம் இப்போது இருக்கிறோம். ஆனால், உங்களுடைய டேஸ்ட் ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போனை தேடுகிறது என்றால், நீங்கள் Tecno Camon 19 Pro Mondrian தான் ட்ரை செய்ய வேண்டும். இது ஒரு ஆர்டிஸ்டிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கிறதா?

எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கிறதா?

இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளங்களான Amazon மற்றும் Flipkart ஆகிய இரண்டும் செப்டம்பர் 23 முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிக் பில்லியன் டே விற்பனையை நடத்துகின்றன. இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பிராண்ட்களின் ஸ்மார்ட்போன் மீது பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கிறதா?

இந்த Tecno Camon 19 Pro Mondrain எடிஷனை கொஞ்சம் பாருங்க

இந்த Tecno Camon 19 Pro Mondrain எடிஷனை கொஞ்சம் பாருங்க

Realme, Oppo மற்றும் Infinix போன்ற பிராண்ட்களின் தயாரிப்புகள் மீது கிடைக்கும் சில தரமான சலுகைகளைப் பற்றி நாங்கள் உங்களுக்கு முன்பே தெரியப்படுத்தியிருந்தோம். இருப்பினும், நீங்கள் ஒரு தனித்துவமான, கலை நுணுக்கங்களுடன் கூடிய ஒரு பிராண்டட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், டெக்னோவின் இந்த புதிய Tecno Camon 19 Pro Mondrain எடிஷன் ஸ்மார்ட்போனை தான் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

சூரிய ஒளியில் தோற்றத்தை மாற்றும் புது ஸ்மார்ட்போன்

சூரிய ஒளியில் தோற்றத்தை மாற்றும் புது ஸ்மார்ட்போன்

புதிதாக வெளியிடப்பட்ட Tecno Camon 19 Pro Mondrain Edition வரும் செப்டம்பர் 22 முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த சாதனம் அடிப்படையில் Camon 19 Pro மாடலாகும். இருப்பினும், இது பிரபல டச்சு ஓவியர் Pier Mondrian-க்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு சிறப்பு பின் பேனலைக் கொண்டுள்ளது. இது சூரிய ஒளியுடன் இணையும் போது மாண்ட்ரைனின் படைப்புகளை பிரதிபலிக்கும் வகையில் பின்புறம் வெள்ளை நிறத்தில் இருந்து நிறத்தை மாற்றும் படி வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

சலுகையுடன் இந்த போனை என்ன விலையில் வாங்கலாம்?

சலுகையுடன் இந்த போனை என்ன விலையில் வாங்கலாம்?

இந்த சாதனம் இந்தியாவில் ரூ. 17,999 என்ற சிறப்பு விலையில் தொடங்கப்படும், அறிமுக சலுகைக்குப் பிறகு இதன் விலை கணிசமாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. இத்துடன் உங்களுக்கு SBI கார்டு மூலம் ஷாப்பிங் செய்யும் போது 10% உடனடி தள்ளுபடியையும் சேர்த்து கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், Tecno பிராண்டின் கீழ் கிடைக்கும் Tecno POVA 5G மற்றும் Tecno Spark 9 ஆகிய மாடல்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது.

வண்டி நம்பர் பிளேட் விபரங்களை வைத்து உரிமையாளரை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி?வண்டி நம்பர் பிளேட் விபரங்களை வைத்து உரிமையாளரை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி?

Tecno POVA 5G மீது கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?

Tecno POVA 5G மீது கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?

Tecno POVA 5G இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.19,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை 5G ஸ்மார்ட்போனாக இருக்கிறது. Tecno POVA 5G கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் கிக்ஸ்டார்ட்டர் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கு ரூ. 15,299 விலையில் கிடைக்கப் போகிறது. கூடுதலாக, எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். எஸ்பிஐ டெபிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.750 தள்ளுபடியைப் பெறலாம்.

Tecno Spark 9 கூட சலுகையுடன் கிடைக்கிறதா?

Tecno Spark 9 கூட சலுகையுடன் கிடைக்கிறதா?

Tecno Spark 9 சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனத்தின் விலை ரூ. 8,999 ஆகும். அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது இதன் நீங்கள் ரூ.8,099 விலையில் வாங்கலாம். அதுமட்டுமின்றி, எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இதன் மீது ரூ. 1500 தள்ளுபடி கிடைக்கிறது. ஒரு புது விதமான ஆர்டிஸ்டிக் லுக் உடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் இந்த Tecno Camon 19 Pro Mondrain Edition மாடலை தவறவிடாதீர்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Tecno Camon 19 Pro Mondrian, POVA 5G, Spark 9 Get Awesome Discounts On Amazon Great Indian Festival

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X