நம்பலனாலும் அதான் நிஜம், விலை ரூ.12,499 மட்டுமே: 11 ஜிபி ரேம், 64 எம்பி கேமரா உடன் புது ஸ்மார்ட்போன்!

|

Tecno Camon 19, Camon 19 Neo ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ கேமன் 19, கேமன் 19 நியோ ஸ்மார்ட்போனானது 11 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகி இருக்கிறது. கூடுதலாக 64 எம்பி டிரிபிள் ரியர் கேமராவுடன் கேமன் 19, 48 எம்பி டிரிபிள் ரியர் கேமராவுடன் கேமன் 19 நியோ அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் விலையில் மேம்பட்ட ஸ்மார்ட்போன்கள்

பட்ஜெட் விலையில் மேம்பட்ட ஸ்மார்ட்போன்கள்

டெக்னோ நிறுவனம் இன்று இந்தியாவில் கேமன் 19 மற்றும் கேமன் 19 நியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. கேமன் 19 ஸ்மார்ட்போனானது 64 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 11 ஜிபி ரேம் (6 ஜிபி + 5 ஜிபி மெமரி ஃப்யூஷன்) மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் கேமன் 19 நியோ ஆனது 48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 1 ஜிபி ரேம் (6 ஜிபி + 5 ஜிபி மெமரி ஃப்யூஷன்) ஆதரவை கொண்டிருக்கிறது.

Tecno Camon 19 விலை

Tecno Camon 19 விலை

Tecno Camon 19 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், 11 ஜிபி ரேம் (6 ஜிபி + 5 ஜிபி மெமரி ஃப்யூஷன்) மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற ஒரே வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூ.14,999 மட்டுமே ஆகும்.

Tecno Camon 19 கிடைக்கும் தன்மை

Tecno Camon 19 கிடைக்கும் தன்மை

இந்த ஸ்மார்ட்போனின் வண்ண விருப்பங்களை பொறுத்தவரை இது இகோ பிளாக், Sea (கடல்) சால்ட் ஒயிட் மற்றும் ஜியோ மெட்ரிக் க்ரீன் ஆகிய வண்ண விருப்பங்களில் அறிமுகமாகி இருக்கிறது. அதேபோல் நிறுவனத்தின் தகவல்படி இந்த ஸ்மார்ட்போன் 50K+ சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்குவதற்கு கிடைக்கும்.

Tecno Camon 19 Neo ஸ்மார்ட்போனின் விலை

Tecno Camon 19 Neo ஸ்மார்ட்போனின் விலை

Tecno Camon 19 Neo ஸ்மார்ட்போனின் 11 ஜிபி ரேம் (6 ஜிபி + 5 ஜிபி மெமரி ஃப்யூஷன்) மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற ஒரே வேரியண்டில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ட்ரீம்லேண்ட் க்ரீன், ஐஸ் மிரர் மற்றும் இகோ ப்ளாக் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 23 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

Tecno Camon 19, Camon 19 Neo சிறப்பம்சங்கள்

Tecno Camon 19, Camon 19 Neo சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இரண்டு ஸ்மார்ட்போன்களும் கேமரா அம்சங்களை தவிர பிற அம்சங்களை ஒரே மாதிரியாக கொண்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.8 இன்ச் FHD+ டாட்-இன்-டிஸ்ப்ளே அளவைக் கொண்டிருக்கிறது. இது 500 நிட்ஸ் பிரகாசத்தை வழங்குகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் MediaTek Helio G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Tecno Camon 19, Camon 19 Neo கேமரா அம்சங்கள்

Tecno Camon 19, Camon 19 Neo கேமரா அம்சங்கள்

Tecno Camon 19 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 64 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் Tecno Camon 19 Neo ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 32 எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது.

5,000 mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

5,000 mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

அதேபோல் பேட்டரி அம்சங்களை பொறுத்த வரையில், Tecno Camon 19, Camon 19 Neo ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Tecno Camon 19, Camon 19 Neo Launched in india With 11GB RAM, 64MP Triple Rear Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X