தனிமையை விரட்டும் புதிய ரோபோ தோழன்!

Posted By: Karthikeyan
தனிமையை விரட்டும் புதிய ரோபோ தோழன்!

மனிதர்கள் தனிமையை பெரும்பாலும் விரும்புவதில்லை. ஏனெனில் அவர்கள் சமுதாய பிராணி என்று உளவியில் கூறுகிறது. எனினும் சூழ்நிலை காரணமாக பலர் தனிமைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் தனிமையை இப்போது டிவி, ரேடியோ, புத்தகங்கள், கணினிகள், மொபைல் போன்கள் ஆகியவை குறைந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது ஒரு மனித உருவத்தில் இருக்கும் ரோபோ மனிதர்களின் தனிமையை முற்றிலுமாக விரட்டி அடிக்க வருகிறது.

இந்த மனித ரோபோவை ஜப்பானைச் சேர்ந்த யமகட்டா பல்கலைக்கழகத்தைச் சேரந்த சில வல்லுனர்கள் வடிவமைத்திருக்கின்றன. இந்த ரோபோ எப்போதுமே மனிதர்களோடு இருக்கும் வசதி கொண்டது. ஆனால் இந்த ரோபோவை எப்போதுமே தோள்களில் தூக்கி வைத்திருக்க வேண்டும். அப்போது இந்த ரோபோ ஒரு சிறந்த தோழனாக இருந்து தனிமையை விரட்டும்.

எம்எச்-2 என்று அழைக்கப்படுகின்ற இந்த ரோபோவை தோளில் அணிந்து கொள்ளலாம். இதை ரிமோட் மூலம் இயக்கலாம். மேலும் இந்த ரோபோவை இன்டர்நெட்டோடு இணைத்துவிட்டால் உலகின் எந்த பகுதியிலிருந்து இந்த ரோபோவைக் கட்டுப்படுத்த முடியும்.

இந்த ரோபோ நண்பர்கள் மற்றும் உறவினர்களின் செய்கைகள் மற்றும் உரையாடல்களை அருகில் கொண்டு வரும் சக்தி கொண்டது. இந்த ரோபோ 2 கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த ரோபோ மனிதர்களோடு பேசும், பதில் அளிக்கும் அதோடு மனிதர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தனிமையில் உழல்பவருக்கு இந்த ரோபோ வரப்பிரசாதமாக இருக்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot