Subscribe to Gizbot

2154ல் உலகம் இப்படியும் இருக்கலாம்!!

Posted By:

நாம் வாழும் இந்த உலகம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்வி பெரும்பாலோனோருக்கு உண்டு. ஏனென்றால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி ஒவ்வொரு நாளும் உலகத்தில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. மனித குலம் பூமியை தவிர்த்து வேறு கிரகத்தில் வாழ முடியமா என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.

2023ல் மார்ஸ் கிரகத்தில் மனிதர்களை நிரந்தரமாக வாழவைக்க மார்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சி நடந்து வருகிறது. உலக வெப்பமயமாதல் போன்ற பல பிரச்சனைகளின் காரணமாக உலக அழிய வாய்ப்பு உள்ளது. அதனால் தான் விஞ்ஞானிகள் மனிதர்கள் வாழ தகுந்த வேறு கிரகத்தை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் உள்ளனர்.

இதை சித்தரிக்கும் வகையில் வெளியாகி தற்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஹாலிவுட் திரைப்படம் தான் எலிஷியம் (Elysium).இதில் 2154ல் உலகம் எப்படி இருக்கும் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில் பிரம்மாண்டங்களுக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் எப்பொழுதும் பஞ்சம் இருக்காது.

கம்பியூட்டர் உலகில் யுஸர் இன்டர்பேஸ் எனும் டெக்கனாலஜி இன்னும் முழுவதுமாக வளரவில்லை. ஆனால் ஹாலிவுட் படங்களில் ஸ்பெஷல் எபக்ட்ஸின் உதவியைக் கொண்டு எதிர்காலத்தில் கம்பியூட்டர் டெக்னாலஜி என்பது போன்ற காட்ச்சிகளை அமைக்கின்றனர்.

விஷுவில் எபெக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் போன்று தொழில்நுட்பங்கள் மூலமே இது போன்ற ஹாலிவுட் படங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த படத்தில் வரும் விஷியங்கள் நம் கற்பனைக்கும் எட்டாத விதத்தில் உள்ளன. கிழே உள்ள சிலைட்சோவில் இதை பற்றிய படங்கள் மற்றும் ருசிகரமான தகவல்களை பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எலிஷியம்

#1

2154ல் உலகம் எப்படி இருக்கும், மனிதர்கள் எங்கு வாழ்வார்கள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் எந்த அளவிற்க்கு வளர்ந்துள்ளது என்பதை சித்திரிக்கும் படம் தான் எலிஷியம்

எலிஷியம்

#2

இது ஒரு சயின்ஸ் பிக்ஸன் ஆக்ஸன் திரில்லர் திரைபடமாகும்.

எலிஷியம்

#3

மேட் டேமன் (Matt Damon) மற்றும் ஜோடி போஸ்டர் (Jodie foster) ஆகிய இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

எலிஷியம்

#4

2154 ஆம் ஆண்டு மக்கள் இரண்டு பிரிவுகளாக வாழ்கிறாகர்கள் ஒரு பிரிவு மக்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். இன்னொரு பிரிவு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்.

எலிஷியம்

#5

இதில் பணக்காரர்கள் விண்வெளியில் எலிஷியம் என்ற இடத்தை உருவாக்கி அதில் வாழ்கிறார்கள். பெரும் பணக்காரர்கள் மட்டுமே இங்கு வாழ அனுமதிக்கப்படுகிறார்கள்.

எலிஷியம்

#6

இது தான் விண்வெளியில் உள்ள பணக்காரர்கள் வாழும் எலிஷியம்.

எலிஷியம்

#7

இதில் வாழும் இவர்கள் மிகவும் சொகுசாக வாழ்கின்றனர். இவர்களுக்கு வயதும் ஆகாது. நோய்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள இவர்கள் med-bay என்ற மெடிக்கல் சாதனத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

எலிஷியம்

#8

பணம் இல்லாதவர்கள் பூமியில் தான் வாழ வேண்டும். பூமியில் மக்கள் தொகை அதிகரிப்பு, இயற்க்கை சீரழிவு போன்ற பல பிரச்சனைகள் உள்ளது.

எலிஷியம்

#9

எலிஷியம் என்ற விண்கலத்தை பூமியில் தான் தயாரிக்கிறாகர்கள். அங்கு வேலை செய்யும் ஹீரோ சில ரேடியேஷன்களால் பாதிக்கப்படுகிறார்.

எலிஷியம்

#10

அவர் உயிர் பிழைக்க வைக்க எலிஷியத்தில் உள்ள med-bay சாதனத்தால் மட்டும் தான் முடியும்.

எலிஷியம்

#11


அதனால் எலிஷியத்திற்க்கு செல்ல ஹீரோ நினைக்கிறார்.

எலிஷியம்

#12


ஆனால் எலிஷியத்தில் செக்ரட்டிரியாக இருக்கும் ஜோடி போஸ்டர் பூமியிலிருந்து யாரையும் எலிஷியத்திற்க்குள் அனுமதிக்க கூடாது என்று நினைக்கிறார்.

எலிஷியம்

#13

தன்னை காப்பாற்றிக்கொள்ளவும் பூமியில் இருக்கும் மக்களும் எலிஷியத்தில் வாழவேண்டும் என்பதற்க்காகவும் ஹீரோ ஒரு குரூப்புடன் இணைந்து போராடுகிறார். அது நடந்ததா இல்லையா என்பது தான் படம்

எலிஷியம்

#14

வருங்காலத்தில் மக்கள் பூமியைவிட்டு ஸ்பேஷ் ஸ்டேஷனில் வாழலாம் என்பதை கருவாக வைத்தே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எலிஷியம்

#15


இந்த வருடம் ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த படம் வெளியிடப்பட்டது.

எலிஷியம்

#16

2011லே எலிஷியம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

எலிஷியம்

#17

இவ்வருடம் மார்ச் மாதம் எலிஷியம் படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வேறு சில காரணங்களால் ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது.

எலிஷியம்

#18


கிட்டதிட்ட ரூ.700 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எலிஷியம்

#19

அக்டோபர் 3, 2013 வரை இந்த படத்தின் லோக்கல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.560 கோடியாகும்.

எலிஷியம்

#20

அக்டோபர் 3,2013 வரை உலகம் அளவில் இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.1,100 கோடியாகும்.

எலிஷியம்

#21

ரிலீசான தேதி முதல் அக்டோபர் 3,2013 வரை மொத்தமாக இந்த படம் ரூ. 1,650 கோடியை வசூல் செய்துள்ளது.

எலிஷியம்

#22

ரிலீசான முதல் நாளே இந்த படம் ரூ.68 கோடியை வசூல் செய்துள்ளது.

எலிஷியம்

#23

NASAவின் உதவியுடன் எலிஷியத்தின் வடிவத்தை அமைத்தாக இதன் டைரெக்டர் தெரிவித்தார்.

எலிஷியம்

#24

விஷுவில் எபெக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எலிஷியம்

#25

மனித உலகிற்க்கு புதிய உலகத்தை காட்டும் ஹாலிவுட் படம் எலிஷியம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot