வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன?

|

கொரோனா வைரஸை மற்றவங்களுக்கு பரப்புங்கள் என்று இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்து பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லை

வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லை

இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லாத காரணத்தால் உயிரிழப்பை தடுக்க முடியாமல் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது.

24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்

24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்

உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

21 நாட்களுக்கு ஊரடங்கு

21 நாட்களுக்கு ஊரடங்கு

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

Google-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்! தேடினால் சிக்கல் தான்!Google-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்! தேடினால் சிக்கல் தான்!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர் ஆகியோர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் சாப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் வைரஸை பரப்புங்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளை விட்டு வெளியே சென்று முகத்தை மூடாமல் தும்முவோம்

வீடுகளை விட்டு வெளியே சென்று முகத்தை மூடாமல் தும்முவோம்

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வருபவர் முஜீப் முகமது. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரஸை பரப்புவோம் என சர்ச்சைக்குரிய வகையிலான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வைரஸை பரப்புவோம்

வைரஸை பரப்புவோம்

இந்த நிகழ்வு பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஜீப் முகமது இந்த பதிவுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு சமூக வலை தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக போலீசார் முஜீப் முகமதை கைது செய்தனர்.

Best Mobiles in India

English summary
techie says spread corona virus to others in facebook post arrested

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X