ஆன்லைனில் மதுபானம் வாங்க முயன்று ரூ.1.27 லட்சத்தை இழந்த டெக்கி! எப்படி நடந்தது தெரியுமா?

|

ஆன்லைனில் மதுபானம் வாங்க விரும்பிய 40 வயதான மென்பொருள் பொறியாளர், ஆன்லைன் மோசக்காரரிடம் சிக்கி ரூ.1.27 லட்சத்தை சில நொடிகளில் இழந்துள்ளார். இந்த சம்பவம் ஆன்லைனில் உணவு வாங்கும் பயனர்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டிற்கு மதுபானங்கள் டோர் டெலிவரி

வீட்டிற்கு மதுபானங்கள் டோர் டெலிவரி

யெலெனஹள்ளியில் வசிக்கும் அர்ஜுன் ஜெகநாதன் என்பவர், ஜனவரி 19ம் தேதி தனது தாயார் வீட்டில் தங்கி இருந்ததாகவும், ஆன்லைனில் மதுபானம் வாங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு மதுபானங்களை டோர் டெலிவரி வழங்கும் கடைகளை ஆன்லைனில் தேடியவர், கோத்தனூர் டின்னே அருகே இருக்கும் ஒரு கடையின் தொலைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்துள்ளார்.

கேஷ் ஆன் டெலிவரி கிடையாது

கேஷ் ஆன் டெலிவரி கிடையாது

ஜெகந்நாதன் எண்ணை டயல் செய்து, மதுபானங்களை ஆர்டர் செய்துள்ளார், ஆர்டர் செய்த ஒட்டுமொத்த மதுபானங்களின் விலை 1,500 ரூபாயை தாண்டியது. கடைக்காரர் கேஷ் ஆன் டெலிவரி இல்லாத காரணத்தினால் ஜெகந்நாதனிடம் ஆன்லைனில் பணம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா! இது தெரியாம போச்சே இத்தனை நாளா!ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா! இது தெரியாம போச்சே இத்தனை நாளா!

OTP பகிர்ந்தால் சிக்கல்

OTP பகிர்ந்தால் சிக்கல்

அவர் உண்மையில் கடைக்காரனிடம் தான் பேசுவதாக நம்பி, ஜெகநாதன் தனது கிரெடிட் கார்டு விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பின்னர் அழைப்பாளர் பணம் செலுத்துவதற்கு OTP-ஐ பகிருமாறு கேட்க, ஜெகநாதன் தனக்கு வந்த OTP விபரங்களை அவரிடம் கூறியுள்ளார். ஜெகந்நாதன் கணக்கிலிருந்து ரூ.6000 டெபிட் செய்யப்பட்டுள்ளது.

கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?

கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?

வங்கி கணக்கிலிருந்து ரூ.6000 டெபிட் செய்யப்பட்டுள்ளது என்று ஜெகநாதன் தெரிவித்ததும், மறுமுனையிலிருந்த நபர் தொழில்நுட்ப குறைபாடு என்று கூறி, தொடர்ச்சியான OTP எண்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஜெகநாதனிடம் கேட்டிருக்கிறார். ஜெகநாதன் OTP எண்களைப் பகிர்ந்த சில நேரத்தில், டெக்கியின் கணக்கிலிருந்து ரூ.78,742 பறிபோயுள்ளது.

QR ஸ்கேன் மூலமும் திருட்டு, அது எப்படி?

QR ஸ்கேன் மூலமும் திருட்டு, அது எப்படி?

தொழில்நுட்ப குறைபாடு காரணத்தை மீண்டும் கூறி ஜெகநாதனை நேரில் சந்தித்து பணத்தைத் திருப்பித் தருவதாக அந்த நபர் உறுதியளித்தார். பின்னர் அவர் வாட்ஸ்அப் இல் Paytm QR குறியீட்டை ஸ்கேன் செய்யச் சொல்லியுள்ளார், இந்த வழியில், ஜெகநாதனின் அனுப்பிய எல்லா பணத்தையும் அனுப்ப முயற்சி செய்யலாம் என்று கூறியுள்ளார்.

புலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோபுலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோ

பறிகொடுத்த ரூ.1.27 லட்சத்திற்கு என்ன பதில்?

பறிகொடுத்த ரூ.1.27 லட்சத்திற்கு என்ன பதில்?

அந்த நபரின் பேச்சை நம்பி Paytm QR குறியீட்டை ஸ்கேன் செய்த சிறிது நேரத்தில் மீண்டும் ரூ.49,001 ஜெகநாதனின் கணக்கிலிருந்து பறிபோனது. ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்ய முயன்று ரூ.1.27 லட்சத்தை சில நொடிகளில் இழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையை காவல்துறையினர் துவங்கியுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Techie Defrauded And Loses Rs 1.27 Lakh By Trying To Buy Liquor Online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X