போலி அக்கவுன்டில் கமென்ட் போடும் இளைஞர்கள்!!!
இன்றைய மாடர்ன் உலகில் இன்டர்நெட் பெரும் பங்கு வகிக்கிறது. இன்டர்நெட்டின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறுது. இந்தியாவிலும் மக்கள் அதிகமாக இன்டர்நெட்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
உலக அளவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் மக்கள் தொகையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்டர்நெட்களை பயன்படுத்துபவர்களில் இளைஞர்கள் அதிக அளவில் சமூக வலைதளங்கள் அல்லது ஆன்லைன் இணையதளங்களில் கமென்டை போலியான அக்கவுன்டில் இருந்து போடுகிறார்களாம்.

18 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களில் 10க்கி 4 பேர் போலியான அக்கவுன்ட் அல்லது பெயர் தெரியாத அக்கவுன்டில் இருந்து ஆன்லைனில் கமென்ட் போடுகிறார்களாம். அதாவது கிட்டதிட்ட 40% இளைஞர்கள் போலியான அக்கவுன்ட் அல்லது பெயர் தெரியாத அக்கவுன்டின் மூலம் ஆன்லைனில் கமென்ட் போடுகிறார்கள்.
அக்கவுன்டை தொடங்குவதற்க்கு உண்மையான பெயர்களை கேட்கும் இணையதளங்களை 36% இளைஞர்கள் விரும்புவது இல்லையாம். முழுமையாக போலியான தகவல்கள் மூலம் ஆன்லைன் இணையதளங்களை பயன்படுத்துவது கடினம் என்றும் சிலர் நம்புகிறார்களாம்.


Click it and Unblock the Notifications