கைநிறைய ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகள்
தொழில்நுட்ப பிரிவில் தான் வேலை செய்யனுமா, வெளிநாட்டில் அதிக வருமானம் அளிக்கும் தொழில்நுட்ப பணிகளும் அவை வழங்கும் ஊதியம் குறித்தும் தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.
அடுத்து வரும் ஸ்லைடர்களில் அதிக வருமானம் கரும் தொழில்நுட்ப பணிகளின் பட்டியலை பாருங்கள்..

பாஸ்
க்ளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்த இந்த ப்ளாட்ஃபார்ம் சேவையானது சுமார் $130,081 வரை வருமானம் வழங்குகின்றது.

கஸான்ட்ரா
மொபைல் மற்றும் க்ளவுட் அப்ளிகேஷன்களுக்கான பல வித தகவல்களை பதிவு செய்து கொள்ளும் இந்த பணியில் அதிகபட்சம் $128,646 வரை சம்பாதிக்க முடியும்.

மேப்ரெட்யூஸ்
இந்த சேவையானது ஹடூப் மூலம் விலை குறைந்த கம்ப்யூட்டர் சர்வர்களில் டேட்டாக்களை பதிவு செய்ய அனுமதிக்கின்றது, இந்த பணியின் மூலம் $127,315 வரை சம்பாதிக்கலாம்.

க்ளவுடெரா
ஹடூப் போன்ற சேவையை வியாபார ரீதியாக வழங்கும் நிறுவனம் தான் இது. இந்நிறுவனத்தில் அதிகபட்சம் $126,816 வரை சம்பாதிக்க முடியும்.

ஹெச்பேஸ்
இதுவும் ஹடூப் போன்ற தொழில்நுட்பத்தை சார்ந்த்து தான், ஹெச் பேஸ் சார்ந்த பணிகளுக்கான தேவை 20 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

பிஃகு
இது ஒரு ப்ரோகிராமிங் மொழி என்பதோடு இதற்கான தேவை 13 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றதால் இதில் $124,563 வரை வழங்கப்படுகின்றது.

அபாப்
அட்வான்ஸ்டு பிசனஸ் அப்ளிகேஷன் ப்ரேகிராமிங் மென்பொருள் SAP மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் சார்ந்த பணிகளுக்கு $124,262 வரை வழங்கப்படுகின்றது.

செஃப்
இது ஒரு ஐடி ஆட்டோமேஷன் மென்பொருள் என்பதோடு இந்த பணி செய்தால் அதிகபட்சம் $123,458 வரை சம்பாதிக்கலாம்.

ஃப்ளூம்
அதிக படியான டேட்டாக்களை உருவாக்கப்பட்ட இடத்தில் இருந்து ஹடூப் சிஸ்டத்திற்கு கொண்டு செல்லும் பணி தான் ஃப்ளூம், இந்த பணி செய்தால் $123,186 வரை சம்பாதிக்கலாம்.

ஹடூப்
சற்று குழப்பம் வாய்ந்த இந்த தொழில்நுட்பமானது ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் மூலம் அதிக படியான டேட்டாக்களை பதிவு செய்து ஆய்வு செய்வதாகும். இந்த பணியின் மூலம் $121,313 வரை சம்பாதிக்க முடியும்.


Click it and Unblock the Notifications