மக்களை கவர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் விளம்பரங்கள்!!!

|

இன்று உலக அளவில் பிரபலமாக இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. இன்று கம்பியூட்டர் துறை இவ்வளவு பிரம்மாண்டமாக வளர்ந்து உள்ளது, இந்த வளர்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறுது.

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு எப்பொழுதும் மக்களிடையே நல்ல மதிப்பும் மற்றும் அந்த சாதனங்களின் மேல் ஆர்வமும் உண்டு. ஆப்பிள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமானவர் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சிஈஓ ஸ்டீவ் ஜாப்ஸ் தான்.

ஆப்பிள் நிறுவனம் இதுவரை கம்பியூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், மியூசிக் பிளேயர் போன்ற பல சாதனங்களை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மக்களிடத்தில் விரைவில் சென்றடைய காரணம் அந்நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் விளம்பர யுக்தி தான். மக்களை கவர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் பழைய விளம்பரங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்

1977 ஆம் ஆண்டு வந்த ஆப்பிள் 2 கம்பியூட்டரை பற்றிய விளம்பரம் இது. இது தான் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட வீட்டில் பயன்படுத்த கூடிய முதல் மைக்கிரோ கம்பியூட்டர் ஆகும். ஒரு பிஸ்னஸ் மேன் வீட்டிலேயே ஒய்யாரமாக காபி குடித்துக்கொண்டு கம்பியூட்டரை பயன்படுத்தலாம் என்பதே இந்த விளம்பரத்தில் வரும்.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்

பெர்ஸ்னல் கம்பியூட்டரை மக்களிடத்தில் பிரபலமாக்க உருவாக்கப்பட்ட விளம்பரம் தான் இது. A Is For Apple என்பதே இந்த விளம்பரத்தில் முக்கியமானதாகும்.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்

1979 ஆம் ஆண்டு வந்த விளம்பரம் இது. ஆதாம் ஏவால் கதையிலே ஆதாம் ஆப்பிள் என்று கேள்விபட்டிருப்போம். அதை வைத்து வந்து விளம்பரம் தான் இது.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்

எந்த வகையான மக்கள் ஆப்பிள் கம்பியூட்டரை பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வியுடன் பென்ஜமின் பிராங்ளின் ஆப்பிள் கம்பியூட்டரை பயன்படுத்தவது போல் வரும் விளம்பரம் இது. இந்த விளம்பரம் 1980 ஆம் ஆண்டு வந்தது.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்

1997 ஆம் ஆண்டு வந்த விளம்பரம் இது.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்

1998 ஆம் ஆண்டு வந்த imac கம்பியூட்டர் விளம்பரம் இது. பெரிதாக இருக்கும் கம்பியூட்டரை பயன்படுத்துவது கஷ்டமான விஷியமாக இருக்கும் அதனால் ஆப்பிளின் இந்த அழகிய கம்பியூட்டரை பயன்படுத்துங்கள் என்று சித்தரிக்கும் விளம்பரம்.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்


‘Think Different' என்பதை உணர்த்தும் விளம்பரம் இது. உலகில் உள்ள பெருந் தலைவர்களின் படத்துடன், உலகை தன்னால் மாற்ற முடியும் என்று நினைப்பவர்கள் தான் அதை செய்வார்கள் என்பதை சித்தரிக்கும்.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்

2000 ஆம் ஆண்டு வந்த ஆப்பிளின் ibook விளம்பரம்.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்

2006 ஆம் ஆண்டு கலர்புல்லாக வெளிவந்த ஆப்பிள் ஐபாட் விளம்பரம்.

ஆப்பிள் விளம்பரம்

ஆப்பிள் விளம்பரம்

2009 ஆம் ஆண்டு ஆப்பிள் ஸ்டோரில் இருந்து 9 மாதத்தில் 10 கோடி அப்ளிகேஷன்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன அதை சித்திரிக்கும் வகையில் thanks a billion என்று உருவாக்கப்பட்ட விளம்பரம் இது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X