கொரோனா தாக்கம்: வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுங்க: டெக் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை.!

|

தற்சமயம் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 114,422 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் வேகம் குறைந்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. சீனாவை தாக்கிய சார்ஸ் நோய் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டது. இந்த வைரஸ் ஒருவரை தாக்கினால் அவர்களுக்கு பல அடிப்படை பிரச்சனைகள் ஏற்படும்.

லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும்

லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும்

இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம்வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கியிருப்பதால், நிறைய முன்னணி டெக் நிறுவனங்கள் அதிரடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

மார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை.! ஏன்? எதற்கு?மார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை.! ஏன்? எதற்கு?

வீட்டியில் இருந்தபடியே வேலை செய்யலாம்

வீட்டியில் இருந்தபடியே வேலை செய்யலாம்

அதன்படி பேஸ்புக், மைக்ரோசாஃப்ட், அமேசான் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் ஊழியர்களுக்கு வீட்டியில் இருந்தபடியே வேலை செய்யலாம் எனவும், அலுவலகம் வரத் தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளன.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

இதில் கூகுள் நிறுவனமும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலைபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது என்பதுகுறிப்பிடத்க்கது. மேலும் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்க நேர்முகத் தேர்வை ரத்துசெய்துவிட்டு, கணினி மூலம்வீடியோ காலிங் முறையில் விர்ச்சுவலாக தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூகுள் அலுவலகத்திற்கு

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கூகுள் அலுவலகத்திற்கு வெளியாட்களின் வருகையை முற்றிலுமாகத்தவிர்த்துள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் டிவிட்டர் நிறுவனமும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை
செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Android ஸ்மார்ட்போன் பிராண்ட்களால் பயன்படுத்தப்பட்ட பிரபலமான அப்ஸ்-ஐ நீக்கம் செய்த கூகிள்!Android ஸ்மார்ட்போன் பிராண்ட்களால் பயன்படுத்தப்பட்ட பிரபலமான அப்ஸ்-ஐ நீக்கம் செய்த கூகிள்!

கொரோனா பரவலை ஒரளவு கட்டுப்படுத்தலாம்

கொரோனா பரவலை ஒரளவு கட்டுப்படுத்தலாம்

இதன்மூலம் கொரோனா பரவலை ஒரளவு கட்டுப்படுத்தலாம் என டெக்க நிறுவனங்கள் நடவடிக்கையை எடுத்துவருகின்றன, மேலும் அடுத்த இரண்டு மாதத்திற்கு நடக்கவிருந்தத நிகழ்ச்சிகளைப் பல நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.

டெக் நிகழ்ச்சிகள் ரத்து

டெக் நிகழ்ச்சிகள் ரத்து

மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் f8 மாநாடு, Global Marketting Summit, கூகுள் நிறுவனத்தின் Cloud Next, I/o 2020, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் MVP Global Summit போன்ற பல்வேறு டெக் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Tech Industries Asking Employees to Work Form Home due to Corona : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X