ஆன்லைன் வகுப்பு: ஜூம் அழைப்பை துண்டிக்க மறந்த ஆசிரியர்கள் செய்த காரியம்- பள்ளி நிர்வாகம் நடவடிக்கை!

|

ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடன் ஜூம் செயலியை துண்டிக்க மறந்த பள்ளி மாணவர்கள் மீது இரண்டு ஆசிரியர்கள் மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதை பதிவு செய்த மாணவரின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

கொரோனாவைக் கட்டுப்படுத்த தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியானது.

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

மாணவர்களுக்கு சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வலியுறித்து வருகிறது. அதற்கேற்ப தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி வருகிறது. வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதான பயன்பாடாக ஜூம் செயலி

பிரதான பயன்பாடாக ஜூம் செயலி

ஜூம் செயலி என்பது பல்வேறு தேவைக்கும் பிரதான பயன்பாடாக இருக்கிறது. நீதிமன்ற வழக்கு விசாரணையும் வீடியோகால் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஜூம் செயலி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தாலும், இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பள்ளி

சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பள்ளி

இந்த நிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆன்லைன் வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பு எடுத்து கொண்டிருந்தனர். வகுப்புகள் முடிந்துள்ளது ஆனால் ஜூம் இணைப்பை துண்டிக்க மறந்த இரண்டு ஆசிரியர்கள் மாணவர்கள் குறித்து மோசமாக விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

உஷார்:இன்ஸ்டாவில் பதிவிட்ட பெண்ணின் புகைப்படம்-தவறாக சித்தரித்து பணம் சம்பாதித்த கும்பல்!உஷார்:இன்ஸ்டாவில் பதிவிட்ட பெண்ணின் புகைப்படம்-தவறாக சித்தரித்து பணம் சம்பாதித்த கும்பல்!

ஜூம் இணைப்பை துண்டிக்க மறந்த ஆசிரியர்கள்

ஜூம் இணைப்பை துண்டிக்க மறந்த ஆசிரியர்கள்

ஜூம் இணைப்பை துண்டிக்க மறந்த ஆசிரியர்கள் தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு அறிவே இல்லை என ஒரு ஆசிரியரும் கடுமையான வார்த்தைகளை முன்னிருத்தி ஒரு ஆசிரியரும் விமர்சனங்களை முன்வைத்தனர். மூத்த ஆசிரியர்கள் எதனடிப்படையில் இவர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள் என்று கூறுகிறார்கள் என்றே தெரியவில்லை.

வீட்டுப்பாடம் செய்ய சொன்னால் முடியாது

வீட்டுப்பாடம் செய்ய சொன்னால் முடியாது

டிக்டாக்கில் வீடியோவை ஒரு பட்டனை தட்டி வீடியோ பதிவேற்றம் செய்வார்கள் அதே எலெக்ட்ரானிக் முறை வீட்டுப்பாடம் செய்ய சொன்னால் தெரியாது என தொடர்ந்து இரண்டு ஆசிரியர்களும் பேசுகிறார்கள். இதை கேட்ட சில மாணவர்கள், சார் நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்கள் உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட வில்லை என தொடர்ந்து கூறியும் அதை இரண்டு ஆசிரியர்களும் கவனிக்கவில்லை.

பள்ளி நிர்வாகத்திடம் புகார்

பள்ளி நிர்வாகத்திடம் புகார்

இரண்டு ஆசிரியர்களின் உரையாடலை ஒரு மாணவரின் தாய் பதிவு செய்து பள்ளி நிர்வாகத்திடம் அளித்து புகார் செய்துள்ளார். இதை கேட்ட பள்ளி நிர்வாகம் இரண்டு ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த சம்பவத்தால் மாணவர்கள் புண்படுத்தப்பட்டதற்கு வருந்துகிறம் எனவும் பள்ளிநிர்வாகம் தெரிவித்துள்ளது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Teachers Suspended Who Forgot to Disconnect Zoom Call and severely criticized by the students

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X