Home
News

பட்ஜெட் விலையில் அதிநவீன ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தும் டிசிஎல்.!

மேலும் பல்வேறு ஆப் வசதிகளை இந்த ஸ்மார்ட்டிவியில் பயன்படுத்த முடியும் என்று டிசிஎல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

இந்தியாவில் சிறந்த டிசிஎல் நிறுவனம் சிறந்த கட்டிங்-எட்ஜ் தயாரிப்புகளை வெளியிடுகிறது, மேலும் டிசிஎல் மல்டிமீடியா நிறுவனம் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு 7 இயங்குதளம் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு, ஆடியோ மற்றும் விஷுவல் அனுபவம் இந்திய பார்வையாளர்களுக்கு தகுந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த மூன்று தொலைக்காட்சி தயாரிப்பாளர்களில் ஒன்றாக டிசிஎல் நிறுவனம் உள்ளது, குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஆன்லைன் சந்தை ஆன பிளிப்கார்ட் நிறுவனம் மற்றும் டிசிஎல் இணைந்து இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட் டிவி பிராண்ட் iFFALCON பிரத்யேக அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி புதுதில்லி ஏப்ரல் 26, 2018 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசிஎல்

டிசிஎல்

டிசிஎல் விரைவில் வரவிருக்கும் ஸ்மார்ட் டிவி மாடலை இறுதி-பயனர் நிலையான, மென்மையான மற்றும் வசதியான பெரிய திரை பொழுதுபோக்கு வழங்க இலக்கு கொண்டுள்ளது. இந்த பிராண்ட் மிக மலிவு விலையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் சிறந்த ஸ்மார்ட் டிவிஎஸ் க்கான அடையாளத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவில சிறந்த 4கே யுஎச்டி தொழில்நுட்பம் கொண்ட புதிய iFFALCON ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை இந்திய சந்தையில் கிடைத்த புதுமையான ஸ்மார்ட் டிவி வரபிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். பெருகி வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். இந்த வரம்பில் உள்ள ஸ்மார்ட் டிவிக்கள் பொறுத்தவரை அதிக விலையைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மல்டிமீடியா அனுபவம் வழங்கும் தன்மை கொண்டுள்ளது.

iFFALCON

iFFALCON

iFFALCON பொறுத்தவரை பல்வே தனிப்பட்ட மற்றும் வசதிகளை வழங்குகிறது, குறிப்பாக வீட்டு பொழுதுபோக்கு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த சாதனம் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு வசதிக்கு வேண்டி யூட்யூப், நெட்ஃப்ளிக்ஸ், மற்றும் Eros போன்ற முன்னணி உள்ளடக்க வழங்குநர்கள் உடன் வலுவான கூட்டு சேர்ந்துள்ளது டிசிஎல், மேலும் பல்வேறு ஆப் வசதிகளை இந்த ஸ்மார்ட்டிவியில் பயன்படுத்த முடியும் என்று டிசிஎல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்திகரமான பொழுதுபோக்கு அனுபவத்தையும் பின்பு ஒரு விரிவான தொழில்நுட்ப உள்ளடக்கத்தையும் இந்த ஸ்மார்ட் டிவியில் பார்க்க முடியும்.

ஆண்ட்ராய்டு 7

ஆண்ட்ராய்டு 7

மேலே குறிப்பிட்டபடி டிசிஎல் நிறுவனம் iFFALCON ஸ்மார்ட் தொலைக்காட்சியில் ஆண்ட்ராய்டு 7 இயங்குதளத்தை பயன்படுத்த முடியும், குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

டிசிஎல் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரும் iFFALCONஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 32-இன்ச் மற்றும் 42-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் UHD பெரிய திரை டிவி அனுபவம் கொண்ட ஒரு மாடல் ஆகியவற்றை அளிக்கும் என்று அறிகிறோம். மேலும் இந்தியாவில் டிசிஎல் தயாரிப்புகள் அனைத்தும் சிறந்த தரம் கொண்டவையாக உள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட் டிவி மாடல் விற்பனைக்கு வந்தால் சிறப்பான வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மல்டிமீடியா

மல்டிமீடியா

டிசிஎல் நாட்டின் வளர்ந்துவரும் மற்றும் துடிப்பான பல்வேறு பொழுதுபோக்கு தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஒரு மிக-தனிப்பயனாக்கப்பட்ட, ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் ஏப்ரல் 26, 2018, அன்று நுகர்வோர்கள் தங்கள் மல்டிமீடியா தேவைகளுக்கு பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களை புதிய வரம்பில் பார்க்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
TCL plans to change smart TV ecosystem in India with the new iFFALCON TV range; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X