Home
News

ஆஹா.. இந்த ஸ்மார்ட் டிவி தான் இருக்கத்துலயே பெஸ்ட்.. எல்லாமே லேட்டஸ்ட் டெக்.. பெஸ்ட் ஸ்பெக்ஸ்.. விலை என்ன?

புது ஸ்மார்ட் டிவி (smart tv) வாங்க ஆசையா? அதுவும் மிகவும் துல்லியமான மற்றும் சிறந்த அம்சங்களை கொண்ட லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் டிவியை வாங்க ஆசையா? அப்படியானால், உங்கள் காத்திருப்பிற்கு பலனாய் வெளிவந்துள்ள இந்த TCL மாடல் டிவியை பாருங்கள்.

இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை அறிவித்த பின்னர், TCL இப்போது அதன் புதிய சி755 கியூடி மினி எல்இடி 4கே டிவி (C755 QD Mini LED 4K TV) மற்றும் பி745 4கே யுஎச்டி டிவி (P745 4K UHD TV) மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆகஸ்ட் மாதம் உலகளவில் வெளியிடப்பட்டன.

ஆஹா.. இந்த ஸ்மார்ட் டிவி தான் இருக்கத்துலயே பெஸ்ட்.. எல்லாமே லேட்டஸ்ட்

இதில் டால்பி விஷன் (Dolby Vision), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் 144Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் வீதம் போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. டிசிஎல் சி755 கியூடி மினி எல்இடி 4கே டிவி (TCL C755 QD Mini LED 4K) ஆனது ஐமேக்ஸ் (IMAX) மேம்படுத்தப்பட்ட பார்வை அனுபவத்தை வழங்குகிறது. மறுபுறம், P745 மாடல் மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட் டிவி கேம் ஆக்சிலரேட்டர் அம்சம் மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) ஆதரவுடன் வருகிறது. இந்தியாவில் TCL P745 4K மற்றும் TCL C755 QD-Mini LED விலை பற்றி பார்க்கையில், 98' இன்ச் TCL P745 மாடலின் விலை சுமார் ரூ. 3,09,990 ஆக இருக்கிறது. TCL இன் படி, P745 மாடல் ஏற்கனவே இந்திய சந்தையில் சிறிய அளவுகளில் இருந்தது. புதிய வெளியீடு பெரிய 98' இன்ச் மாறுபாட்டைக் கொண்டுவருகிறது.

TCL C755 QD-Mini LED தொடர் ரூ.89,990 முதல் தொடகி ரூ. 4,99,990 வரை செல்கிறது. டிஸ்பிளே அளவைப் பொறுத்து விலை மாறுபடுகிறது. இந்த மாடல் 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 98 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

TCL P745 4K, TCL C755 QD-Mini LED விவரக்குறிப்புகள்
TCL P745 தொடர் ஸ்மார்ட் டிவிகள் 4K UHD மாடல் 3,840 x 2,160 பிக்சல்கள் திறனுடன் கூடிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் உடன், VA பேனலுடன் கூடிய தட்டையான LCD டிஸ்பிளேவை 16:9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. இது 144Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் வீதம், 6000:1 என்ற மாறுபாடு விகிதம் மற்றும் 550 nits பீக் பிரைட்னஸ் ஆகியவற்றுடன் வருகிறது.

இந்த மாடல் HDR10+, டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ) மற்றும் எச்எல்ஜி (HLG) உயர் டைனமிக் ரேஞ்ச் வடிவங்களையும் ஆதரிக்கிறது. இந்த டிவியில் AiPQ செயலி பொருத்தப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் உடன் இந்த டிவி உள்ளடங்கிய கூகுள் டிவியை இயக்குகிறது. TCL P745 தொடர் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் புளூடூத் 5.0, Wi-Fi 5 மற்றும் HDMI இணைப்புகளை ஆதரிக்கின்றன.

இது கேம் மாஸ்டர் 2.0, மிராகாஸ்ட், வீடியோ சாட் & குயிக் செட்டிங்ஸ், ஏஎம்டி ஃப்ரீசின்க் பிரீமியம் ப்ரோ மற்றும் வெசா வால்-மவுண்டிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மினி-எல்இடி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட TCL C755 தொடர் மாடல்கள் ஆறு அளவுகளில் கிடைக்கின்றன. இது 50' இன்ச், 55' இன்ச், 65' இன்ச், 75' இன்ச், 85' இன்ச் மற்றும் 98' இன்ச் அளவுகளில் வருகிறது. C755 மாடல்கள் புளூடூத் 5.2, Wi-Fi 6 இணைப்புகளை ஆதரிக்கின்றன.

Best Mobiles in India

English summary
TCL P745 and TCL C755 QD Mini LED 4K Smart Tv Launched In India Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X