கொஞ்சம் ஓரம் போங்க., இது எங்க நேரம்: ஐந்து ஸ்மார்ட்போன்கள்., பல்வேறு விலைப்பிரிவில் அறிமுகம் செய்த டிசிஎல்!
டிசிஎல் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் ஐந்து ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இந்த ஐந்து புதிய ஸ்மார்ட்போன்களும் டிசிஎல் 30 தொடரில் இடம் பெற்றிருக்கின்றன. நிறுவனம் டிசிஎல் 30 5ஜி, டிசிஎல் 30+, டிசிஎல் 30, டிசிஎல் 30 எஸ்இ மற்றும் டிசிஎல் 30இ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் முன்னதாக டிசிஎல் 30 எக்ஸ்இ5ஜி மற்றும் டிசிஎல் 30 வி5ஜி சாதனங்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது.

டிசிஎல் 30 தொடர்: விலை
டிசிஎல் 30 சீரிஸ் தற்போது மொத்தம் ஏழு மாடல்களைக் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் பிரியர்களை இலக்காக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டிசிஎல் 30 5ஜி விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.21,000 ஆக இருக்கிறது மற்றும் டிசிஎல் 30+ விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.16,800 ஆக இருக்கிறது. டிசிஎல் 30 விலை இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ. 15,100 ஆகவும் டிசிஎல் 30 எஸ்இ விலை இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.12,550 ஆக இருக்கிறது. டிசிஎல் 30இ விலை இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.11,700 ஆக இருக்கிறது.

டிசிஎல் 30 5ஜி, டிசிஎல் 30, டிசிஎல் 30+: அம்சங்கள்
டிசிஎல் 30 5ஜி, டிசிஎல் 30 மற்றும் டிசிஎல் 30+ ஸ்மார்ட்போன்கள் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்) அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 100% என்டிடிசி டிசிஐ-பி3 வண்ண வரம்புடன் வருகிறது. 90 பிக்சல் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிசிஎல் 30 5ஜி ஆனது மீடியாடெக் 700 எஸ்ஓசி உடன் 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டிசிஎல் 30 மற்றும் டிசிஎல் 30+ ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி37 எஸ்ஓசி உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான கேமரா அமைப்பு
டிசிஎல் 30 5ஜி, டிசிஎல் 30 மற்றும் டிசிஎல் 30+ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதிரியான கேமரா அமைப்புடன் வருகின்றன. இது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், இரட்டை 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்கள் உடன் வருகின்றன. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என டிசிஎல் 30 5ஜி மற்றும் டிசிஎல் 30+ ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் கொண்டிருக்கிறது. டிசிஎல் 30 ஸ்மார்ட்போனானது 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கிறது. மூன்று டிசிஎல் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,010 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.டிசிஎல் 30எஸ்இ மற்றும் டிசிஎல்30இ: அம்சங்கள்

இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5,000 எம்ஏஎச் பேட்டரி
டிசிஎல் 30எஸ்இ மற்றும் டிசிஎல்30இ ஸ்மார்ட்போன்கள் 6.52-இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. டிசிஎல்30எஸ்இ ஆனது 2.5டி வளைந்த கண்ணாடி மற்றும் டிசிஎல் 30இ ஒரு பிளாட் டிஸ்ப்ளே பேனலுடன் வருகிறது. இரண்டு பேனல்களும் 70% என்டிஎஸ்இ கவரேஜ், 450 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. டிசிஎல் 30 எஸ்இ ஆனது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் டெப்த் மற்றும் மேக்ரோ சென்சார்கள் உடனான பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. டிசிஎல் 30இ ஆனது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபி வசதிக்கென டிசஎல் 30 எஸ்இ ஆனது 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் டிசிஎல் 30 இ ஆனது 5 மெகாபிக்சல் ஷூட்டரைக் கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications