அடிப்பொலி.. எல்லோரும் வாங்கும் விலையில் 43-இன்ச், 50-இன்ச் 4K QLED TVகள் அறிமுகம்.. தட்டி தூக்கும் TCL!
சியோமி (Xiaomi) மற்றும் சாம்சங் (Samsung) நிறுவனங்களின் க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளை "தட்டித்தூக்கும்" நோக்கத்தின் கீழ் டிசிஎல் (TCL) நிறுவனமானது.. 43-இன்ச் மற்றும் 50-இன்ச் மாடல்கள் உட்பட 4 புதிய 4கே க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளை (4K QLED Smart TV) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் என்கிற 4 வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை நிர்ணயம் என்ன? இவைகளின் மீது ஏதேனும் அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதா? இந்த டிவிகள் என்னென்ன அம்சங்களை வழங்கும்? இதோ விவரங்கள்:

டிசிஎல் 4கே க்யூஎல்இடி டிவியின் அம்சங்கள்: டிசிஎல் நிறுவனத்தின் புதிய 4கே க்யூஎல்இடி ஸ்மார்ட்டிவிகளானது குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot technology - QLED) பேனலை கொண்டுள்ளன. மேலும் இதன் டிஸ்பிளேவில் ஸ்மார்ட் எச்டிஆர் (Smart HDR), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
சிறந்த இமேஜ் அவுட்புட்டை வழங்குவதற்காக AiPQ இன்ஜின் 3.0 டிசிஎல் அல்காரிதத்துடன் வரும் இந்த 4 புதிய டிவிகளுமே கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இயக்கப்படுகின்றன. சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குவதற்காக 120ஹேர்ஸ்ட கேம் ஆக்சிலரேஷன் (120Hz Game Acceleration) மற்றும் ஏஎம்டி ஃப்ரீசின்க் (AMD FreeSync) போன்ற தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
விலை விவரங்கள்: டிசிஎல் அறிமுகம் செய்துள்ள 4 புதிய க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளுமே சி645 (C645) சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 43-இன்ச் மாடலின் விலை ரூ.40,990 என்றும், 55-இன்ச் மாடலின் விலை ரூ.48,990 என்றும், 55-இன்ச் மாடலின் விலை ரூ.56,990 என்றும், கடைசியாக உள்ள 65-இன்ச் மாடலின் விலை 79,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகைகள்: விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, இந்த 16 ஆம் தேதிக்குள் இந்த டிவிகளை முன்பதிவு செய்தால் ரூ.9,990 மதிப்புள்ள சவுண்ட் பாரை இலவசமாக வெல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். மேலும் முக்கிய வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் 10% உடனடி கேஷ்பேக்கும் (Instant Cashback) கிடைக்கும்.
விற்பனை விவரங்கள்: இந்த 4 மாடல்களுமே ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), க்ரோமா (Croma), ஆஃப்லைன் பிராண்ட் மற்றும் ரீடெயில் ஸ்டோர்ஸ் வழியாக வாங்க கிடைக்கும். இருப்பினும் இலவச சவுண்ட்பார் ஆஃபர் (Free Sound bar) ஆனது ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் க்ரோமா வழியாக மட்டுமே அணுக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








