நம்பமுடியாத விலையில் விற்பனைக்கு வரும் டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!

இப்போது டிசஎல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் டால்பி 5.1 சரவுன்டு சவுன்ட் மற்றும் மேம்படுத்தப்பட்டடிடிஎஸ் போஸ்ட்-பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

|

டிசிஎல் நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் புதிய ரக iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யதுள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை சேர்ந்த டிசிஎல் தொடர்ந்து பல்வேறு மின் சாதனப் பொருட்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அந்த வகையில் தரம் வாய்ந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

இந்த ஸ்மார்ட் டிவி மாடல் சிறந்த பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை கொண்டுள்ள வகையில் வெளிவந்துள்ளது, மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை ஒப்பிடும் போது, சிறந்த அம்சங்கள் மற்றும் செயல்திறன் கொண்டுள்ளது இந்த iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல்கள். சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்தபின்பு, அதற்கு போட்டியாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட் டிவி மாடல்களின் பெயர், iFFALCON 55K2A, iFFALCON 40F2, iFFALCON 32F2என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறந்த பாதுகாப்பு வசதி:

சிறந்த பாதுகாப்பு வசதி:

இப்போது வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட் டிவி மாடல் மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம் மற்றும் அசத்தலான வெள்ளை நிற எல்இடி எச்டி பேக்லைட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் புதிய தொழில்நுட்ப வசதி பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களில கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது.

 iFFALCON 55K2A: 4கே யூஎச்டி:

iFFALCON 55K2A: 4கே யூஎச்டி:

iFFALCON 55K2A ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை 55-இன்ச் யூஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3,840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மமார்ட் டிவி. இவற்றுள் சிறந்த தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ள எல்இடி எச்டி பேக்லைட் ஆனது சிறந்த வண்ணம் வரம்பை அதிகரிக்கிறது மற்றும் டைனமிக் நிற வேறுபாட்டை வழங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் எச்டிஆர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இது உயர்த்துகிறது அனுபவத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

 மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம்:

மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம்:

iFFALCON 55K2Aஇருக்கும் பிரத்யேகமான மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம் வெள்ளை நிற எல்இடி எச்டி பேக்லைட் உடன் வெளிவருகிறது, இந்த தொழில்நுட்ப வசதி முன்னணி வீடியோ பின்னணி அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளது. குறிப்பாக அதிக கான்ட்ராஸ்ட் வழங்கும் வகையில் இவை செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குறிப்பிட்ட தொழில்நுட்பம் வேறு எந்த ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் கிடைக்காது.

 டால்பி 5.1 சரவுன்டு சவுன்ட்:

டால்பி 5.1 சரவுன்டு சவுன்ட்:

இப்போது டிசஎல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் டால்பி 5.1 சரவுன்டு சவுன்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிடிஎஸ் போஸ்ட்-பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஸ்மார்ட் வால்யூம் வழங்கப்பட்டுள்ளதால் திடீரென ஏற்படும் சவுன்டுஃபிளக்சுவேஷன்களிலும் தானாக ஆடியோவை மாற்றியமைக்கும். மேலும் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

 ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்:

ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்:

டிசில் கொண்டுவந்துள்ள இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் டாஸ்க் ஸ்விட்சிங்,பிக்சர் இன் பிக்சர், இன்பில்ட் கூகுள் க்ரோம்காஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் iFFALCON 55K2A ஸ்மார்ட் டிவி மாடலை பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும் என டிசிஎல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

மேலும் கூகுள் சார்ந்த பல்வேறு விருப்பங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடலை கூகுள்வாய்ஸ் தேடலை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.iFFALCON 55K2A மாடலுக்கு கூகுள் சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும்.

குவாட்-கோர்
iFFALCON 55K2A ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் சிபியு மற்றும் டூயல்-கோர் ஜிபியு செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் 2.56ஜிபி ரேம் வசதியும், பின்பு 16ஜிபி உள்ளடக்க மெமரியும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். சிறந்த சக்திவாய்ந்த செயலியைக் கொண்டுள்ளதால் மிக அருமையாக செயல்படும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல். வைஃபை, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

iFFALCON 55K2A ஸ்மார்ட் டிவி H.264/MPEG4/MKV/AVI/MP4 போன்ற பல ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்கள் துணைபுரிகிறது. மேலும் ஸ்மார்ட் டிவி மின்னல் பாதுகாப்பு, வேகமான வெப்ப காற்றோட்டம், அகல வோல்டேஜ் வீச்சு போன்ற விரிவான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

 மல்டிமீடியா:

மல்டிமீடியா:

இந்திய சந்தையில் மல்டிமீடியா உள்ளடக்கத்தை பயனர்கள் எப்படி உட்கொள்ளும் என்பதை வரையறுக்க விரும்புகிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள், 5ஜி மற்றும நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு வீட்டு பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. மேலும் டிசிஎல் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் இருந்தாலும், தடையற்ற அணுகலை வழங்க இது சாத்தியமானது. அதன்பின்பு, ஹாட்ஸ்டார், யூடியூப், நெட்ஃபிக்ஸ், கூகிள் ப்ளே மூவிஸ் மற்றும் டிவி, ஈரோஸ் நவ், போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும் என டிசிஎல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் பல்வேறு ஆப் பயன்பாடுகளை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் உடன் முன்நிறுவப்பட்ட வருகிறது.

டிசிஎல் iFFALCON தொடர் சிறந்த-வகுப்பு அம்சங்களை வழங்குகின்றன என்று கூறுவதற்கு எங்களுக்கு போதுமான காரணங்களை தருகின்றன. மேம்பட்ட வன்பொருள், மென்பொருள், வலுவான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to Find a domain easily for your business (TAMIL)
 விலை:

விலை:

டிசிஎல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வரும் மே மாதம் 7-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்iFFALCON 55K2A ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.45,999-ஆக உள்ளது.அதன்பின்பு iFFALCON 32F2ஸ்மார்ட் டிவி மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.13,499-ஆக உள்ளது, பின்னர் iFFALCON 40F2 ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.19,999-ஆக உள்ளது. டிசிஎல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்கள் விற்பனைக்கு வந்தால் ஜியோ சார்பில் குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகை மற்றும் டேட்டா ஆஃபர் போன்றவை கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
TCL iFFALCON Smart TVs deliver class leading multimedia performance in affordable price-point; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X