வெறும் ரூ.7999 விலையில் 32 இன்ச் TV.. பாதிக்கு மேல் பாதி தள்ளுபடி.. அதிரடி விலை குறைப்பு.. எந்த மாடல் பாருங்க?
யாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில் இப்படியொரு அதிகப்படியான விலை தள்ளுபடியா? என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் புதிய 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை (32 inch Smart TV) வெறும் ரூ. 7999 விலைக்கு வழங்கி அசத்தியுள்ளது பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம். பாதிக்கு பாதி கூட இல்லை, பாதிக்கு மேல் பாதி என்று வியக்கும் வகையில் நேரடியாக 59% அளவிலான, ஒரு அபாரமான விலை குறைப்பை டிசிஎல் (TCL) பிராண்டின் மீது பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
என்னது வெறும் 7999 ரூபாயில் புதிய ஸ்மார்ட் டிவி வாங்கலாமா? அதுவும் 32 இன்ச் டிஸ்பிளே அளவிலா? என்று வியந்து சந்தேகத்துடன் பார்க்கும் உங்களுக்கு இது உண்மையான சலுகை தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம். டிசம்பர் 18, 2024 ஆம் தேதி அடிப்படையில், இன்றைய நாளில் பிளிப்கார்ட் தளம் வழியாக கிடைக்கும் ஆகச்சிறந்த ஒரு சலுகையாக இந்த சலுகை பார்க்கப்படுகிறது.

வெறும் ரூ.7999 விலையில் 32 இன்ச் TV.. பாதிக்கு மேல் பாதி தள்ளுபடி:
உங்கள் வெறும் 8000 ரூபாய் இருந்தால் போதும், இப்போதே உங்கள் வீட்டிற்கான புதிய ஸ்மார்ட் டிவியை
நீங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவி மாடலானது மிகவும் பிரபலமான பிராண்டான TCL நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது. டிசிஎல் (TCL) பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட iFFALCON 32 inch HD Ready LED Smart Android TV (iFF32S44) தான் இப்போது 59% தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது.
இந்த iFFALCON 32 இன்ச் அளவு கொண்ட ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மெட்டாலிக் பேசல்லெஸ் (Metallic Bezel Less) வடிவமைப்பை கொண்டுள்ளது. இது கண்களுகே தெரியாத அளவில் மிகவும் மெல்லிய பேசல் பிரேமை (slim bezel frame) கொண்டுள்ளது. இதன் மூலம் உங்கள் டிஸ்பிளே (display) அனுபவம் முழுமையாக கிடைக்கிறது. இந்த விலையில் பேசல் லெஸ் ஸ்மார்ட் டிவி கிடைப்பது சிறந்த விஷயமாகும்.
iFFALCON 32 inch HD Ready LED Smart Android TV (iFF32S44):
இந்த iFFALCON 32 inch HD Ready LED Smart Android TV (iFF32S44) ஸ்மார்ட் டிவியின் அசல் விலை (MRP price) ரூ. 19,999 ஆகும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 59% நேரடி தள்ளுபடிக்கு பிறகு, இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ. 7,999 ஆக (discount price) குறைந்துள்ளது. இத்துடன் சில குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.1000 வரையிலான கூடுதல் வங்கி தள்ளுபடியும் (bank offers) கிடைக்கிறது.
இந்த TCL ஸ்மார்ட் டிவி (TCL Smart TV) iFF32S44 என்ற மாடல் எண்ணுடன் 32" இன்ச் அளவு கொண்ட 1366 x 768 பிக்சல் உடைய HD ரெடி டிவியாக வருகிறது. இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளேவாக இயங்குகிறது. இதில் HDR 10 சப்போர்ட் ஆதரவும் கிடைக்கிறது. இது LED டிஸ்பிளே டிவியாக விற்பனைக்கு வந்துள்ளது. இது 16W உடன் 2 இன்டெக்ரேடட் ஸ்பீக்கர் பாக்ஸ்களை டால்பி ஆடியோ ஆதரவுடன் கொண்டுள்ளது.
TCL ஸ்மார்ட் டிவியின் ஸ்டோரேஜ் மற்றும் இணைப்பு அம்சங்களின் விபரங்கள்:
இந்த ஸ்மார்ட் டிவி (Smart TV) CA55x4 @1.1GHz பிராசஸர் உடன் G31MP2 @550MHz கிராஃபிக் பிராசஸரை (Graphic Processor) கொண்டுள்ளது. இது 1GB ரேம் (RAM) உடன் 8GB ஸ்டோரேஜ் (Storage) ஆதரவை கொண்டுள்ளது. இதில் Netflix, Youtube, Disney+Hotstar, Amazon Prime Video, போன்ற OTT தளங்களின் பயன்பாடு கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS சாதனங்களுடன் இணக்கமானது.
இதில் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), குரோம்காஸ்ட் (Chromecast) அம்சம் போன்றவையும் இருக்கிறது. இதில் வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் இணைப்பு அம்சங்களும் இருக்கிறது. இதன் ஸ்மார்ட் ரிமோட், வாய்ஸ் கண்ட்ரோல் உடன் Netflix மற்றும் ப்ரைம் வீடியோவுக்கான பிரத்தியேக ஹாட்கீ பட்டனை கொண்டுள்ளது. மலிவு விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு இந்த சாதனம் ஒரு அற்புதமான வரப்பிரசாதம்.


Click it and Unblock the Notifications








