தட்கல் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? இனிமேல் "அந்த" பிரச்சனை இருக்காது!

|

இந்தியாவில் பேருந்து பயணத்தை விட மக்கள் அதிகளவில் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள், குறிப்பாக வெளியூர் செல்லும் மக்கள் அதிகளவில் ரயில் பயணத்தை தான் பயன்படுத்துகின்றர். ஆனால் ரயில் பயணம் என்னதான் சுகமாக இருந்தாலும், அதற்கு டிக்கெட் எடுப்பது பெரும்பாடுதான்.

 ரயில்வே அமைப்பு

ரயில்வே அமைப்பு

குறிப்பாக பயணத்திற்கு முந்தைய நாள் தட்கல் டிக்கெட் எடுப்பது மிகவும் கடினம், ஆனால் இனி தட்கல் டிக்கெட்டுகள்எடுப்பது முன்பைப் போல அவ்வளவு கடினமாக இருக்காது. அதாவது இனிமேல் அதிக டிக்கெட்டுகள் தட்கல் முறையில்
கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது ரயில்வே அமைப்பு.

 ஏஜென்ட்கள் 60பேர் கைது

ஏஜென்ட்கள் 60பேர் கைது

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த தட்கல் டிக்கெட்டுகளை பிளாக் செய்துவைக்கும் பல முக்கியச் சட்ட விரோத மென்பொருள்களை கண்டறிந்துள்ளது இந்திய ரயில்வே அமைப்பு. பின்பு இப்படிக் குறுக்குவழிகள் மூலம் மொத்தமாக டிக்கெட் எடுக்கும் ஏஜென்ட்கள் சுமார் 60பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்

அருண் குமார் அவர்கள்

அருண் குமார் அவர்கள்

குறிப்பாக தட்கல் டிக்கெட்டுகள் முன்பு போல நிமிடங்களில் தீர்ந்துவிடாது எனவும்,பயணிகளுக்கு இந்த டிக்கெட்டுகள்சில மணிநேரங்கள் கூட இனி இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF)தலைமை இயக்குநர் அருண் குமார் அவர்கள்.

முன்பதிவு செய்பவர்கள்

மேலும் ANMS, MAC,Jaguar போன்ற கண்டறிப்பட்ட மென்பொருள்கள், IRCTC தளத்தில் லாகின் செய்யும்போது கேட்கும் Captcha முன்பதிவு செய்யும் முன் கேட்கும்Captcha, OTO போன்றவற்றை கடந்துவிடும்,ஆனால் சாதாரணமாக முன்பதிவு செய்பவர்கள் ஒவ்வொன்றாக டைப் செய்து அடுத்தக்கட்டத்திற்கு செல்லவேண்டும்.

 1.48நிமிடங்களில்

1.48நிமிடங்களில்

சாதாரண பயனாளருக்கு முன்பதிவு செய்ய சராசரியாக 2.55நிமிடங்கள் ஆகிறதென்றால், இந்த மென்பொருள்மூலம் 1.48நிமிடங்களில் முன்பதிவு செய்துவிட முடிகிறது.

மோசடி மென்பொருள்

மோசடி மென்பொருள்

குறிப்பாக ஒரு வருடத்தில் இந்த மோசடி மென்பொருள்களால் மட்டும் நடந்திருக்கும் வர்த்தகத்தின் மதிப்பு 50கோடி முதல் 100கோடி ரூபாய் வரை இருக்கும் என செய்திகளில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 குறைகளை கலைந்துள்ளோம்

குறைகளை கலைந்துள்ளோம்

மேலும் வெளிவந்த அறிவிப்பில் இனி ஒரு தட்கல் டிக்கெட் கூட இது மாதிரியான சட்ட விரோத மென்பொருள்கள் மூலம்முன்பதிவு செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஐஆர்சிடிசி தளத்தில் இருக்கும் குறைகளை கலைந்துள்ளோம் எனவும், மோசடி செய்து வந்த முக்கிய முகவர்களையும் கைது செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார் அருண்குமார்.

Best Mobiles in India

English summary
Tatkal Ticket Availability to Rise as Indian Railways Blocks Many Illegal Software: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X